
மைசூர், அக். 24:
மைசூர் சாமுண்டி மழையில் ஸ்ரீ சாமுண்டேஸ்வரி தேவியின் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
காலை முதலே சாமுண்டி பெட்டாவில் அடர்ந்த பனிமூட்டமும் தூறல் மழையும் நிலவியது. இருப்பினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெட்டாவிற்கு வருகை தந்து தேரோட்டத்தில் பங்கேற்றனர். மலர்கள் மற்றும் வர்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேர், கோயில் கோபுரத்தின் பின்னணியில் கண்கவர் காட்சியாக அமைந்தது.
இந்த தேரோட்டத்தில் மைசூர் மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜா உடையார் தனது முழு குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். ராஜமாதா பிரமோதா தேவி உடையார், மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜா உடையார், மகாராணி த்ரிஷிகா குமாரி உடையார் உள்ளிட்ட ராஜ வம்சத்தினர் தேருக்குப் பூஜைகள் செய்து வடம் பிடித்து இழுத்தனர். இவர்களுடன் சாமுண்டேஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ. ஜி.டி. தேவேகௌடா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
தசரா திருவிழாவின் இறுதி முக்கிய ஆன்மீக நிகழ்ச்சியான இது, ஆண்டுதோறும் ஆஸ்வயுஜ பௌர்ணமி தினத்தன்று நடத்தப்படுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
தேரோட்டத்தின் போது காவல்துறையின் இசைக்குழுவினர் நடத்திய வாத்ய நிகழ்ச்சி அனைவரையும் ஈர்த்தது. காவல்துறையினர் பட்டாசுகளை வெடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். மழை மற்றும் பனிமூட்டத்தையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்கள் செல்பேசிகளில் தேரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்து, “ஜெய் சாமுண்டேஸ்வரி” கோஷங்களை எழுப்பி உற்சாகத்தைக் கொண்டாடினர்.
தேரோட்டத்தையொட்டி பெட்டாவிற்குச் செல்லும் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், சிறப்பான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
.png)
1 hour ago
1







English (US) ·