புதிய அனல் மின் நிலையங்களால் மின் கட்டணம் உயரும் – தனியார் அமைப்பு ஆய்வில் தகவல்!

1 hour ago 1

சென்னை, அக். 24- தூத்துக்குடியில் முன்மொழியப் பட்டுள்ள புதிய அனல்மின் நிலையங்களால் மின் கட்டணம் உயரும் என தனியார் அமைப்பின் ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய தூத்துக்குடியில் 2 புதிய நிலக்கரி அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித் தார். மின்கட்டணச் செலவுகள் உயர்ந்து வரும் நிலையிலும், மாநில மின்துறையின் கடன் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ள நிலையிலும், புதிய நிலக்கரி மின் நிலையங்களை அமைப்பது மின்சாரக் கட்டணத்தை மேலும் உயர்த்தும் என்று கிளைமேட் ரிஸ்க் ஹொரைசன்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் முன்மொழி யப்பட்டுள்ள தலா 800 மெகா வாட்டில் 2 அனல்மின் நிலையத் தின் மின்சாரம், 8 மணி நேர பேட்டரி சேமிப்புடன் இணைந்த சூரிய ஒளி மின்சாரத்தை விட ஏறக்குறைய இருமடங்கு விலை உயர்ந்ததாக இருக்கும்.

புதிய அனல்மின் நிலையங் களின் மின்சார உற்பத்தி செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ.8.75 முதல் ரூ.10.4 வரை இருக் கும். இதற்கு மாறாக, அதே அளவு மின் உற்பத்தியை 8 மணி நேர மின்கல (பேட்டரி) சேமிப்புடன் இணைந்த சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் பெற்றால், ஒரு யூனிட்டுக்கு ரூ.5 மட்டுமே செலவாகும். எனவே தூய்மையான புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி முறையைப் பயன்படுத்துவது, தூத்துக்குடியில் மாசுப்பாட்டையும் தடுக்கும்.

முன்மொழியப்பட்ட திட்டம் செயல்பாட்டுக்கு வரும் முதல் ஆண்டில் ரூ.4,120 கோடியும், முதல் 5 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடியும் நிலையான செலவுகளாக செலுத்தும் கட்டாயத்தில் மின்சார வாரியம் சிக்கிக் கொள்ளும். மாநில மின் விநியோக அமைப்பு எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்களுக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

திமிடப்பட்டுள்ள 1,600 மெகாவாட் நிலக்கரி மின்சாரத்திற்கு பதிலாக 9,067 மெகாவாட் பேட்டரி சேமிப்புடன் கூடிய 3,490 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத் தலாம். இதற்கு மொத்த மூலதன செலவு ரூ.27,289 கோடி தேவைப்படும். பேட்டரி சேமிப்புடன் இணைந்த சூரிய ஒளி மின்சாரத்தைத் தேர்ந்தெடுப்பது மாநில கருவூலத்திற்கும், சாதாரண நுகர்வோருக்கும் சேமிப்பை அளிக்கும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Read Entire Article