Last Updated:Oct 24, 2026 3:50 PM IST
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காதல், மர்மம் மற்றும் அமானுஷ்ய திகில் கலந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா எழுதி இயக்கியுள்ளார். சென்னையில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. அச்சகத்தில் வேலை செய்யும் Magi (G. V. பிரகாஷ் குமார்), குறைந்த வாடகையில் தங்குவதற்கு ஓர் இடத்தைத் தேடுகிறார். அப்போது சிந்து (கயாடு லோஹர்) என்ற மர்மமான பெண்ணைச் சந்திக்கின்றார். சிந்து தனது ஆடம்பரமான வீட்டில் ஒரு அறையை மிகவும் குறைந்த வாடகைக்கு தருகிறார்.
ஆனால் முதலில் நல்ல வாய்ப்பாகத் தெரிந்த இந்த விஷயம் பின்னர் பல மர்மமான சம்பவங்களால் பயத்தை ஏற்படுத்துகின்றது. சிந்துவின் வாழ்க்கையில் இருக்கும் ரகசியங்களை மாகி அறியத் தொடங்கும்போது அவர் எதிர்பார்க்காத பல விஷயங்கள் வெளியே வருகின்றன. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், இந்தப் படம் வரும் அக்டோபர் 30-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “Magi நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர். அவர் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிறார். இந்தக் கதாபாத்திரத்தில் எனக்குப் பிடித்த விஷயம் என்னவென்றால், பார்வையாளர்களைப் போலவே மாகியும் ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாகக் கண்டுபிடிக்கின்றார்.
அவரது பயணத்தில் ஆர்வம் பயம் மற்றும் குழப்பம் எனப் பல விஷயங்கள் இருக்கும்,அதனால் இந்தக் கதாபாத்திரம் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இப்போது Sony LIV-ல் ரசிகர்கள் இப்படத்தைப் பார்த்து அதன் மர்மத்தைத் தெரிந்துகொள்ளப் போவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.
.png)






English (US) ·