நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்.. விரையும் தேசிய பேரிடர் மீட்பு படை

1 hour ago 2

Last Updated:Oct 24, 2026 4:55 PM IST

நீலகிரியில் தொடர் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை ஊட்டிக்கு

நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்
நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்

நீலகிரி மாவட்டம் உதகையில் தொடர் கனமழையால் 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதில் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். நீலகிரிக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது. ஊட்டிக்கு 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உதகையில் நேற்றிரவு முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. அதிகபட்சமாக பர்லியாரில் 25 சென்டி மீட்டர் மழை பெய்த நிலையில், உதகை-மேட்டுப்பாளையம் சாலையில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அரசு பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது. இடிபாடுகளில் சிக்கி பேருந்தின் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நடத்துநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், என்ன நேர்ந்தது என்று விளக்கம் அளித்துள்ளார்.

பர்லியாறு பகுதியில் நிலச்சரிவால் பல இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன. இதனால், சாலை போக்குவரத்தும் உதகை மலை ரயில் சேவையும் பாதிக்கப்பட்டன. மலைப் பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகளை ஜேசிபிகள் உதவியுடன் அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா நேரில் ஆய்வு செய்தார்.

உதகை தீட்டுக்கல் பகுதியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 கார்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. மேலும், காவலாளி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோத்தகிரி கொணவக்கரை சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டனர்.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் கொட்டக்கம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றோரம் மண்சரிவு ஏற்பட்டதால் வீடு ஒன்று இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மிக கனமழையால் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண்சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்திற்கு இடையூறு இருப்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்க ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து சுற்றுலா தலங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட வேண்டுமென ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். மேலும் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறையின் கோரிக்கையின் அடிப்படையில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) அரக்கோணம் 04-வது பட்டாலியனிலிருந்து இரண்டு மீட்புக் குழுக்கள் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Read Entire Article