புதுடில்லி அக். 24- இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் அல்லது புதுப் பிக்கப்படும் ஓட்டுநர் உரிமங்களுக்கு வெவ்வேறு நிறங்களை அறிமுகப்படுத்த சாலைப்போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மோட்டார் வாகன விதிகளில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. மோட்டார் வாகன விதிகளில் கொண்டு வரப்படவுள்ள திருத்தங்கள் குறித்த வரைவு அறிக்கையில், ஓட்டுநர் உரிமத்தில் உரிமம் பெற்றவரின் ரத்த வகை, அலைபேசி எண் மற்றும் அவசர காலத் தொடர்பு எண்கள் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படும். வயது மற்றும் முகவரிக்கான சான்றாக நிர்வாக நீதிபதி அல்லது நோட்டரி முன்னிலையில் உறுதிமொழிப்பத்திரம் சமர்ப்பிக்கும் முறையை நீக்கப்படும். உரிமம் வழங்கும் அதிகார அமைப்பால் வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு ஓட்டுநர் உரிமமும் படிவம் 7இன் கீழ் லேமினேட் செய்யப்பட்ட அல்லது பாலிவினைல் குளோரைடு அட்டையாக இருக்க வேண்டும். இதில் இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமங்களுக்குத் தனித்தனி வடிவங்கள் இடம்பெற வேண்டும்.
முறைகேடுகளை தடுக்கும் வகையில் வயது மற்றும் முகவரிக்கான சான்றுகளாக உறுதி மொழிப் பத்திரங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டு ஆவணங் களை ஏற்றுக்கொள்வதற்கும் அமைச்சகம் முன்மொழிந்து உள்ளது. பாதுகாப்பாக ஓட்டுதல் குறித்த பயிற்சி மதிப்பீட்டில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதியானது 60 சதவீதத்தில் இருந்து 75சதவீதமாக உயர்த்தப்படும். ஆதார் அங்கீகாரத்தின் மூலம் இணையவழியில் பெறப்படும் சில ஓட்டுநர் உரிமச் சேவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
கணவருக்கு வேறொரு பெண்ணுடன் உறவு இருப்பது மட்டுமே மனைவிக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தலாகாது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, அக். 24- கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை மனைவிக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தலாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008இல் திருமணம் ஆன ஒரு இணைய ருக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்தது. கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்பதால் மனமுடைந்த மனைவி, குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக கணவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கில் கணவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வில்லை என்று கூறி, கணவரை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, பெண்ணின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்மோகன், பெண்ணைக் காணவில்லை என, சகோதரர் அளித்த புகாரில், திருமணத்தை மீறிய உறவு பற்றி குறிப்பிட்டிருந்த போதிலும், வரதட்சணைக் கொடுமை குறித்து எதையும் குறிப்பிடவில்லை என்பதையும் கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
வரதட்சணைக் கேட்ட குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, ஆரம்பக்கட்ட புகாரில் அது குறிப்பிடப் படாததால், பின்னரே சாட்சிகளால் அக்குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டுள்ளதையும் கீழமை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
அதே வேளையில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே, இந்திய தண்டனை சட்டம் 498A என்ற பிரிவின் படி மனைவிக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தலாக கருத முடியாது எனவும் குறிப்பிட்ட நீதிபதி, கணவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
.png)
58 minutes ago
1





English (US) ·