புதுடில்லி, அக். 24- அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை ஏற்றிச் செல்வதற்காக ஈரான் ஏர் (Iran Air) நிறுவனத்திற்கு இந்தியா அனுமதி மறுத்துவிட்டதாக வெளியாகும் செய்திகள், பன்னாட்டு அளவிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தையும் கவலை யையும் ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை களுக்குப் பயந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஈரான் விமானங்களுக்கு நேரடி மருந்துப் போக்கு வரத்து அனுமதி வழங் குவதை இந்தியா நிறுத்திவைத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.
அவசரகால மனித நேய உதவிகள் கூட வெளிப்புற நாடுகளின் அழுத்தங்களுக்குப் பலிகடாவாக வேண்டுமா என்ற கேள்வி தற்போது வலுத்துள்ளது. உயிர்காக்கும் மருந்துகளின் போக்குவரத்துக்கே இதுபோன்ற தடைகள் விதிக்கப்பட்டால், நாட்டின் ‘மூலோபாய சுயஆளுமை’ (Strategic Autonomy) என்பதற்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது என்று சமூக ஆர்வலர்களும் அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டுகின்றனர்.
உலகளாவிய அரசியல் அழுத்தங்கள் மற்றும் பொருளாதாரத் தடை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், மனிதாபிமான அடிப்படையிலான மருத்துவ உதவிகள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது என்றும், மனிதநேயம் என்பது வெளிப்புற அழுத் தங்களுக்கு எக்காலத்திலும் பணயக் கைதியாகிவிடக் கூடாது என்றும் குரல்கள் வலுத்து வருகின்றன.
.png)
45 minutes ago
1






English (US) ·