வன்னியரசு புலியை துரத்திய விவகாரம்: நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக்கோரி வழக்கு

13 minutes ago 1

Last Updated:Nov 23, 2026 5:00 PM IST

நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் வன்னியரசு புலியை துரத்திய விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமைச்சர் வன்னியரசு புலியை துரத்திய விவகாரம்
அமைச்சர் வன்னியரசு புலியை துரத்திய விவகாரம்

நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் வன்னி அரசு புலியை துரத்திய நிகழ்வு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கந்தன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

முதுமலை புலிகள் சரணாலயத்தில் ஜீப் சவாரிக்கு தடை கோரிய வழக்கில் புலிகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட துறையின் அமைச்சராக இல்லாத நிலையில், புலிகள் காப்பகத்துக்குள் சென்று அமைச்சர் வீடியோ வெளியிட்டுள்ளது வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரின் செயல் குற்றமா? என்பதை ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. அமைச்சர் வன்னியரசு மீதான புகார் குறித்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் தலைமையிலான வன பாதுகாப்பு தொடர்பான சிறப்பு அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Read Entire Article