`கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா?'- பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

12 minutes ago 1

"கலெக்டர் பத்மஜாவிற்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் இடமிருந்து குறுஞ்செய்தி வந்ததாக மாவட்ட ஆட்சியர் எந்தப் புகார் அளிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது"- தமிழிசை சௌந்தரராஜன்

Published:Just NowUpdated:Just Now

தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜன்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்பியதாக கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஆட்சியர் தரப்பில் எந்த ஒரு பதிலும் சொல்லப்படாத நிலையில் இச்சம்பவம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து, 7 நாள்களுக்குள் நடவடிக்கை அறிக்கை அளிக்கத் தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது.

அருள் விக்னேஷ்

அருள் விக்னேஷ்

இந்நிலையில் மெசேஜ் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அதில், "கலெக்டர் பத்மஜாவிற்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் இடமிருந்து குறுஞ்செய்தி வந்ததாக மாவட்ட ஆட்சியர் எந்தப் புகார் அளிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு ஏன் இவ்வளவு தாமதம். செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த தகவல் பரவிக் கொண்டிருக்கிறது, கண்டனத்திற்குரியதாகிக் கொண்டிருக்கிறது...

தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜன்

இன்னும் சொல்லப்போனால் தேசிய மகளிர் ஆணையத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்... தாமதப்பட்ட நீதியே மறுக்கப்பட்ட நீதியாக இருக்கும்பொழுது.. தாமதப்பட்ட இந்த விளக்கத்தை தமிழ்நாட்டு மக்கள் எப்படி எடுத்துக் கொள்வது?

அது மட்டுமல்ல ஆட்சியர் புகார் அளிக்கவில்லை என்று தான் சொல்கிறார்களே தவிர சட்டமன்ற உறுப்பினர் மெசேஜ் அனுப்பினாரா இல்லையா என்பதில் விளக்கம் இல்லை?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Read Entire Article