Last Updated:Nov 23, 2026 5:18 PM IST
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாக சிபிஎம் எம்.எல்.ஏ. லதா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையில், இன்று சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் சிபிஐ மற்றும் சிபிஎம் எம்.எல்.ஏ.க்கள் உட்பட கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியேவந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் எம்.எல்.ஏ. லதா, “கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம் குறித்து முதலமைச்சரிடம் கூறினோம். அதற்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், அம்மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என விளக்கம் கேட்டு தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதேபோல், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கவுரி, “கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஒரு எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார். அது, பணியிடத்தில் துன்புறுத்தல் இல்லையா? கலெக்டரின் கணவர் புகார் கொடுத்துள்ளார். இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது” என பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று "கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தலைமைச் செயலாளருக்கு எந்த புகாரும் வரவில்லை" என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் இன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் எம்.எல்.ஏ. லதா இது குறித்து முதலமைச்சரிடம் பேசியதாகவும், அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கூட்டம் முடிந்து வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் எம்.எல்.ஏ. லதாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம் குறித்து முதலமைச்சரிடம் கூறினோம். அதற்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
.png)







English (US) ·