Song | 5 முறை எழுதி திருப்தியில்லை.. கமல் மேல் வாலிக்கு கோபம்… பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டான பாடல்! 

14 minutes ago 1

Last Updated:Nov 23, 2026 5:07 PM IST

5 முறை எழுதியும் கமல்ஹாசனுக்கு திருப்தி இல்லை. இதனால் கடுப்பான வாலி எழுந்து சென்றுவிட்டார். பின்னர் உருவான பாடல் இன்றும் பேவரைட்.

சில பாடல்கள் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரசிக்க வைக்கும். அப்படியான ஒரு பாடல் தான் இது. இன்று கேட்டால் நமக்குள் அதன் தாக்கம் இருக்கும். அப்படியான பாடல் உருவாக்கத்தின்போது கமல்ஹாசனிடம் கோபித்துகொண்டிருக்கிறார் வாலி. பின்னர் ஒருவழியாக இந்தப் பாடல் எழுதப்பட்டது. பின்னணி என்ன என்பது குறித்து பார்ப்போம்.

இது தொடர்பாக மேடை ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், “ஊக்குவித்தால், ஊக்கு விப்பவனும் தேக்கு விற்பான் என சொல்வார் வாலி. அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு பாடல் இன்னும் நன்றாக வரவேண்டும் என நினைத்தேன். வாலியை பொறுத்தவரை பல வேஷம் போடுபவர். சில நேரங்களில் பூவாக இருப்பார். சில நேரங்களில் கரும்பாக இருப்பார். நான் வண்டு. ஒருமுறை பூ என நினைத்து கரும்பை கடித்துவிட்டேன். பல் உடைந்துவிட்டது.

அவரிடம் ‘இன்னும் நல்லா எழுதி கொடுத்தா..’ என சொல்லிவிட்டேன். அதில் ‘இன்னும்’ என்பது அவர் காதில் விழவில்லை. நான் சொன்னதை கேட்டு கடுப்பாகிவிட்டார். என் ஆசைக்காக கேட்டேன் என்றேன். கோபமாகி எழுந்து சென்றுவிட்டார். வேறு பாடல் எழுதுகிறேன். இந்தப் பாடலை எழுதமாட்டேன் என்றார்.

நான் மீண்டும் கேட்டேன். ‘நான் கடா கடாங்குறேன்.. நீ உழக்குப்பால் உழக்குப் பால்னு’ சொல்ற என்றார். அது அவருடைய பேவரைட் வாக்கியம். ‘என்னயா அந்த டைரக்டரும் நீ சொல்றதையே சொல்றாரு.. நான் என்ன வாலியா.. வாலி பாலா?’ என கேட்டார். அதன் பிறகு கொஞ்சம் நேரம் கழித்து பேட் எடுத்து வைத்து எங்கள் வீட்டில் அமர்ந்து எழுதிய பாடல் தான் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்’ பாடல். 5 முறை எழுதி 6வது முறை ஓகே ஆனது.

என்னை நினைத்து நொந்து எழுதினார். எழுதி கொடுத்துவிட்டு போதுமா என சொல்லிவிட்டு தமிழக அரசின் விருதையே வாங்கிவிட்டார்.” என பேசியிருந்தார் கமல்ஹாசன். சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கடந்த 1989-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘அபூர்வ சகோதரர்கள்’. இந்தப் படத்தில் கமல்ஹாசன், ஜெய்சங்கர், கௌதமி, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார்.

படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. பாடல்களும் ஹிட்டாகின, குறிப்பாக, ‘உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே’ பாடல் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ‘ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்… மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்..’, ‘ கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்’,  ‘காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்’ போன்ற வரிகள் காலத்தால் அழியாதவை.

EXCLUSIVE | “நாஸ்டாலஜிக்காகத்தான் ஃபீடிங் பாட்டில் செர்லாக்கை அறிமுகப்படுத்தினோம்... செக்‌ஷுவலைஸ் செய்வதை நாங்களும் விரும்பவில்லை!” - கஃபே விளக்கம்!

“நாஸ்டாலஜிக்காக இருக்குமென்றே ஃபீடிங் பாட்டிலில் செர்லாக் விற்றோம்; ஆனா இப்போ...” - கஃபே விளக்கம்!

  • சென்னையில் கடந்த வாரம் ஃபீடிங் பாட்டிலில் செர்லாக் விற்பனை செய்தது ஒரு கஃபே.

  • இதனை பாலியல் ரீதியாக தவறான உள்நோக்கங்களுடன் சிலர் விளம்பரப்படுத்தினர்.

  • அதற்கு கஃபே தரப்பு முதன்முறையாக நியூஸ் 18-ல் பதிலளித்துள்ளது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article