Last Updated:Oct 24, 2026 5:39 PM IST
அஜித்குமார் நடிக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்குமார் நடிக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய 2 திரைப்படங்கள் வெளியாகின. இந்தப் படங்களைத் தொடர்ந்து ஓராண்டாக அஜித் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. முழுக்க முழுக்க ரேஸிங்கில் அஜித் கவனம் செலுத்தியதால் புதிய படம் எதுவும் வெளியாகவில்லை. இந்த ஆண்டுக்கான கார் ரேஸிங் முடிந்த நிலையில், தற்போது அஜித் திரைப்படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார்.
அஜித்தின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தை ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். படத்துக்கு ‘டேர் டெவில்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், தற்போது வேறொரு ஹீரோயின் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
அதன் படி, ‘டேர் டெவில்’ படத்தின் நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.png)





English (US) ·