School Leave | கனமழை எதிரொலி.. நாளை 10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?

1 hour ago 1

Last Updated:Oct 25, 2026 4:46 PM IST

School Leave | கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களுக்கு மழையின் தீவிரத்தை பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிப்பது வழக்கமாகும்.

தமிழ்நாட்டில் நாளை (அக்டோபர் 26) 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்னாப் (Arnab) புயல் வலுவடைந்து வருவதால், அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வட தமிழகக் கடற்கரைக்கு அப்பால் வங்கக்கடல் பகுதியை நோக்கி நாளைக்குள் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று (அக்டோபர் 25) புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய அதி கன மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளை கனமழை அறிவிப்பு வெளியாகி உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழையின் தீவிரத்தைப் பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதால் நாளை காலை மழையின் தீவிரத்தைப் பொறுத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்க வாய்ப்புள்ளது.

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. மழையின் தீவிரத்தைப் பொறுத்து அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு தீவிரமாக இருந்த மாவட்டங்களுக்கு கடந்த வாரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 நண்பர்களோடு சேர்ந்து இன்றே பதிவு செய்யுங்கள்!

‘நம்ம ரன் கோயம்புத்தூர் 2026’: நண்பர்களோடு சேர்ந்து இன்றே பதிவு செய்யுங்கள்!

  • நம்ம ரன் கோயம்புத்தூர் 2026 நிகழ்ச்சி, நவம்பர் 22-ல் நடைபெறுகிறது.

  • இதில் இம்முறை தனியாக இல்லாமல், உங்கள் நண்பர்களோடு கலந்து கொள்ளுங்கள்.

  • இதற்கு எப்படி பதிவுசெய்வது என தெரிந்துகொண்டு, இன்றே பதிவுசெய்யுங்கள்!

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article