Last Updated:Oct 25, 2026 5:27 PM IST
ராஜஸ்தானில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 46-க்கு வாங்கப்படுவதால் மத்திய அரசின் திட்டமிடல் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெரும் அளவில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, பல மணி நேர மின் இணைப்பு துண்டிப்பு நிகழ்வெல்லாம் நடந்துவந்தன. இதனை தீர்ப்பதற்காக ரூ.35 எனும் விலையில் வெளி சந்தையில் வாங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
குறிப்பாக ஒரு யூனிட் ரூ. 35 எனும் விலையில் சுமார் 1000 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய இருப்பதாக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மாநிலத்தின் மின் நுகர்வு குறைந்ததால், அரசு ஆயிரம் மெகாவாட் யூனிட்டில் இருந்து 300 மெகாவாட் யூனிட்டாக கொள்முதலை குறைத்தது. இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு அதிகவிலைக்கு தமிழ்நாடு அரசு மின் கொள்முதல் செய்கிறது என தொடர்ந்து அரசியல் கட்சியினர் கேள்விகளை எழுப்பிவந்தனர்.
இந்நிலையில் மின் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “ராஜஸ்தான் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ₹46.09 செலவிடுவதாக ஆங்கில நாளேட்டின் கட்டுரை கூறுகிறது. இது, மத்திய அரசின் தேசிய தேவை முன்னறிவிப்பு மற்றும் வளப் போதுமான திட்டமிடல் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
This is a major miss from Union Power Ministry,
Article says Rajasthan is spending ₹46.09 per unit power. This has raised serious questions about national demand forecasting and resource adequacy planning by Union government. Since individual States have limited visibility of nationwide power demand and generation availability, unlike central power-sector institutions.
The Union Power Ministry needs to examine why such demand–supply gaps were not anticipated and planned in advance. Atleast now Union Power Ministry should plan on national-level forecasting and better coordination with states which could help States avoid such prohibitively expensive power in future.
https://t.co/GGosQj3vTF
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) October 25, 2026
ஏனெனில், மத்திய மின்சாரத் துறை நிறுவனங்களைப் போலல்லாமல், தனிப்பட்ட மாநிலங்களுக்கு நாடு தழுவிய மின்சாரத் தேவை மற்றும் உற்பத்தி இருப்பு குறித்த தெளிவான பார்வை குறைவாகவே உள்ளது. இத்தகைய தேவை-விநியோக இடைவெளிகள் ஏன் முன்கூட்டியே கணிக்கப்பட்டு திட்டமிடப்படவில்லை என்பதை மத்திய மின்சார அமைச்சகம் ஆராய வேண்டும்.
குறைந்தபட்சம் இப்போதாவது, மத்திய மின்சார அமைச்சகம் தேசிய அளவிலான முன்னறிவிப்பு மற்றும் மாநிலங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு குறித்து திட்டமிட வேண்டும். இது எதிர்காலத்தில் மாநிலங்கள் இதுபோன்ற கட்டுக்கடங்காத விலையுள்ள மின்சாரத்தைத் தவிர்க்க உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.
.png)







English (US) ·