வெற்றிப் பயணத்தைத் தொடரும் சிவசங்கரி

1 hour ago 1

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னணிச் சுவர்ப்பந்து விளையாட்டாளர் எஸ்.சிவசங்கரியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது.

உலகின் நாலாம் நிலை ஆட்டக்காரரான சிவசங்கரி, சனிக்கிழமை (அக்டோபர் 24) கலிஃபோர்னியாவில் ரெட்வுட் சிட்டியில் சிலிக்கான் வேலி பொது விருதை வென்றார்.

இறுதிப் போட்டியில் அவர் 11-7, 11-6, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் உலகின் 20ஆம் நிலை வீராங்கனையான எகிப்தின் ஃபரிதா முகம்மதைத் தோற்கடித்தார். அந்த ஆட்டம் 31 நிமிடங்களே நீடித்தது.

கடந்த ஆண்டு இதே போட்டித் தொடரின் இறுதிச்சுற்றுவரை முன்னேறிய 27 வயது சிவசங்கரி, அமெரிக்காவின் ஒலிவியா வீவரிடம் பட்டத்தைத் தவறவிட்டார்.

இவ்வாண்டில் மட்டும் அவர் இதுவரை நான்கு பட்டங்களை வென்றுள்ளார். தொழில்முறைச் சுவர்ப்பந்துச் சங்கப் போட்டிகளில் இது இவ்வாண்டில் அவருக்கு மூன்றாவது பட்டம்.

முன்னதாக, மார்ச் மாதம் ஆஸ்திரேலியப் பொது விருதையும் ஏப்ரல் மாதம் ஸூரிக்கில் கிராஸ்ஹாப்பர் கிண்ணத்தையும் அவர் கைப்பற்றியிருந்தார்.

சென்ற மாதம் ஜப்பானில் நடந்த ஆசியப் போட்டிகளிலும் சிவசங்கரி வாகைசூடினார். அதன்மூலம் அவர் 2028 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அவர் தகுதிபெற்றார்.

Read Entire Article