மாஸ்கோ, அக். 25-
ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு டீசல் ஏற்றுமதி தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, தலா 40,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றிச் சென்ற 3 எண்ணெய் கப்பல்கள் நியூயார்க் துறைமுகத்தை நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்டன. இதுகுறித்து ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் கூறியதாவது: “ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு டீசல் ஏற்றுமதி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 3 எண்ணெய் கப்பல்களில் டீசல் அனுப்பப்பட்டுள்ளது. அக்டோபரில் 3 லட்சம் மெட்ரிக் டன் டீசலைக் கொள்முதல் செய்ய அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 5 லட்சம் மெட்ரிக் டன் டீசலை அமெரிக்காவுக்கு அனுப்ப உள்ளோம்” என்றார்.