ஜெர்மனியில் யுவன் இசை நிகழ்ச்சியில் ‘வைப்’ செய்த சிம்பு… வைரலாகும் வீடியோ! 

1 hour ago 1

Last Updated:Oct 25, 2026 1:32 PM IST

ஜெர்மனியில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் பாடல் பாடி நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்பு
சிம்பு

ஜெர்மனியில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் பாடல் பாடி நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஜெர்மனியில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதில், யுவனுடன் நடிகர் சிலம்பரசன் ஒரே மேடையில் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் பாடல் பாடி அசத்தினார். ’வானம்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்ற ’நோ மணி நோ மணி’ என்ற பாடலை பாடியும் நடனமாடியும் சிலம்பரசன் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். யுவன் இசை நிகழ்ச்சியில் சிலம்பரசன் கலந்து கொண்டு பாடல் பாடியதால் அரங்கமே அதிர்ந்தது

சிம்புவை பொறுத்தவரை, அவர் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் ‘தக் லைஃப்’. அந்தப் படத்துக்குப் பிறகு ஓராண்டாக எந்தப் படமும் வெளியாகவில்லை. அடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.


SIMBU MANIA❤️😭💥 #STR #Silambarasan #TheU1niverseTour #U1
@SilambarasanTR_ @thisisysr @andrea_jeremiah @STRFans https://t.co/Eyb6CznoYD


— Sujan (@SujanThvkmr) October 25, 2026

யுவன் சங்கர் ராஜா இசையில் ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படம் உருவாகி வருகிறது. அதேபோல மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடிக்கும் ‘பரிபாடி’ படத்துக்கும் யுவன் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article