விமான எரிபொருள் மீதான வாட் வரி குறைப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

58 minutes ago 1

Last Updated:Oct 23, 2026 7:13 PM IST

தமிழகத்தில் விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை 29 சதவீதத்திலிருந்து குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, சென்னை விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட விமான சேவை நிறுவனங்களின் விமானங்களுக்கு விற்பனை செய்யப்படும் விமான எரிபொருள் மீதான வரி 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் பிற விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட விமான சேவை நிறுவனங்களின் விமானங்களுக்கு விற்பனை செய்யப்படும் எரிபொருள் மீதான வரி 29 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாகப் புறப்படும் எடையை 40 ஆயிரம் கிலோ கிராமுக்குக் குறைவாகக் கொண்ட திட்டமிடப்பட்ட விமானங்களுக்கான எரிபொருள் மீதான வரி, பிற விமான நிலையங்களில் 5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு 2026 நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்து, 2027 அக்டோபர் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில், அக்டோபர் 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. வரிச் சலுகையைப் பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் உரிய அறிவிப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து மாதாந்திர வரிக் கணக்குடன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article