Last Updated:Oct 23, 2026 8:09 PM IST

ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படம் ‘தகப்பன்’. இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக உருவாகி வருகிறது.
‘தெனாவட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமப் பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘TTT’ திரைப்படத்திற்குப் பிறகு, மதுரை மண்ணின் மண்வாசனையுடன் கூடிய கதையில் ஜீவா நடிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் (Marshall Robinson) இசையமைக்கிறார். படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்திற்கு அவரது இசை கூடுதல் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. மேலும், படம் முடிவடைவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனம் மற்றும் OTT உரிமையை Zee5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் போஸ்டர்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகவுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. குடும்ப உறவுகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம், ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
.png)







English (US) ·