Bigg Boss | விஜய்சேதுபதி விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் யார் தெரியுமா? 

1 hour ago 1

Last Updated:Oct 23, 2026 8:41 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குரல் பாதிப்பு காரணமாக விஜய் சேதுபதிக்கு பதிலாக இந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 10 தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வரும் விஜய் சேதுபதிக்கு பதிலாக இந்த வாரம் புதிய தொகுப்பாளர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். யார் அவர் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 10 தொடங்கி 5 வாரங்கள் கடந்துள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. 5வது வார இறுதியில் சாந்தினி வோட்டிங் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்பாராத விதமாக ராகவ் அறுவை சிகிச்சை காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கடந்த வாரம் நடைபெற்ற டைமண்ட் திருடும் டாஸ்க்கில் அட்டகாசமாக விளையாடி ரசிகர்கள் மனதை வென்றார் டிடிஎஃப் வாசன். அதனால் இந்த வாரம் நன்றாக விளையாடும் டாஸ்க்கை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருந்தனர். அதன் படி வீட்டை இரண்டாக பிரித்து ப்ளூ, ரெட் என இரண்டு அணிகளாக 8 - 8 பேர் பிரிந்தனர். இந்த டாஸ்கிற்கு சர்வைவல் டாஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது.


யார் அந்த BIGG HOST. 🤔😎


Boss Tamil Season 10 - சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/c5nkswus1i

— Vijay Television (@vijaytelevision) October 23, 2026

இப்படியாக பல டாஸ்க் வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் முனியம்மா - ஜேசன் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களிடம் பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் விஜய் சேதுபதி. ஆனால், இந்த வாரம் அவர் வரமாட்டார் என கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு கடந்த சில வாரங்களாக குரல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவர் கஷ்டப்பட்டே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனால் அவருக்கு பதிலாக இந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருக்கிறார். அடுத்தடுத்த வாரங்களில் மீண்டும் விஜய் சேதுபதி வருவாரா? அல்லது ரம்யா கிருஷ்ணன் தொடர்வாரா?  என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

Read Entire Article