சென்னை, நவ. 23- சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், வடபழனி-போரூர் இடையிலான வழித் தடத்தில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ள 6 ரயில் நிலையங்களை பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் நான்காவது வழித்தடத்தில், பூவிருந்தவல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ. தொலைவுக்கு கடந்த அக்டோபர் 11ஆம் தேதி ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஆலப்பாக்கம் சந்திப்பு, காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், சாலிகிராமம் கிடங்கு, சாலிகிராமம் ஆகிய 6 நிலையங்கள் மட்டும் இன்னும் திறக்கப் படாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
.png)
13 minutes ago
1





English (US) ·