டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அதிகாரங்கள் குவிப்பு – முன்னாள் துணை வேந்தரும், நீதிபதி குரியன் குழு உறுப்பினருமான அசோக் வர்தன் ஷெட்டி, அய்.ஏ.எஸ். கருத்து! ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப் பட்டுள்ளதால் மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப் படுகின்றன; கல்வி, வனம் உள்ளிட்டத் துறைகள் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
* நில அளவைத் தூண் மேல் தீபம் ஏற்றும் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு மனு! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதித்த உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது; தொல்லியல் சின்னத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து அரசு கவலை தெரிவித்துள்ளது. பாஜக தவிர்த்து, அனைத்து அரசியல் கட்சிகளும் அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான விதிகளைத் தளர்த்தும் மசோதாவுக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஒப்புதல்! இதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) மற்றும் வழிகாட்டுதல்களை அரசு விரைவில் வெளியிடும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார்.
தி இந்து:
* ‘சைமன் திரும்பி போ’ போராட்டத்துடன் எஸ்.அய்.ஆர் எதிர்ப்புப் போராட்டத்தை ஒப்பிட்ட தெலங்கானா முதலமைச்சர்! பிரிட்டிஷ் ஆட்சிக் கால சைமன் கமிஷன் எதிர்ப்பை போல, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு (SIR) எதிராகவும் காங்கிரஸ் “ஞானேஷ் குமார் கோ பேக்” என்ற முழக்கத்துடன் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என ரேவந்த் வலியுறுத்தி உள்ளார்.
தி டெலிகிராப்:
* ‘வேலைவாய்ப்புகள் எங்கே?’ – வேலையின்மை குறித்து பிரதமர் மோடியைச் சரமாரியாக கேள்வி எழுப்பிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்! தொழிலதிபர்கள் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை எனக் குற்றம்சாட்டும் பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதியான வேலை வாய்ப்புகளை நிறைவேற்றத் தவறியதற்கு பொறுப்பைத் தனியார் துறையிடம் தள்ளுவது ஏன் என சவுரவ் தாஸ் கேள்வி.
தி டெலிகிராப்:
* நிதிஷ் குமாரை மக்கள் பார்வையில் இருந்து மறைத்து, அய்க்கிய ஜனதா தள (JD(U)) கட்சியை பாஜகவுடன் இணைக்க முயற்சி – பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு! அய்க்கிய ஜனதா தள கட்சியில் பாஜக ஆதரவாளர்கள் ஆதிக்கம் செலுத்தி, அக்கட்சியை பாஜகவுடன் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக நிதிஷ் குமாரை பொது நிகழ்ச்சிகளில் இருந்து திட்டமிட்டு ஒதுக்குவதாகவும் கிஷோர் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* 200 தொகுதிகளின் வாக்குப்பதிவு தரவுகளில் குளறுபடி – காங்கிரஸ் குற்றச்சாட்டு! 2024 தேர்தலில் 200 தொகுதிகளில் மாலை 5 மணிக்குப் பிந்தைய வாக்குப்பதிவுத் தரவுகள் காணவில்லை; வாக்குத் திருட்டுக்கு மோடி, அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்.
– குடந்தை கருணா
.png)
17 minutes ago
1






English (US) ·