தஞ்சை மாவட்டம் உரத்தநாடு தொகுதி வேட்பாளராக நின்று மூன்று முறை வெற்றி பெற்றவரும், சிறந்த வழக்குரைஞரும், யதார்த்த வாதியும், எவரிடத்திலும் எளிமையாகப் பழகும் பான்மையுற்றவருமான ‘புல்லட்’ இராமச்சந்திரன் என்று பலராலும் அறியப்பட்ட தி.மு.க.வின் முக்கிய நீண்ட காலப் பொறுப்பாளர்களில் ஒருவருமான அருமை அன்புக்குரிய எம்.இராமச்சந்திரன் இன்று (2.11.2026) காலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவரை
எம்.ஆர். என்றே அழைப்பார்கள்.
நம்மிடத்தில் தனி அன்புடனும், மரியாதையுடனும் எங்கும், எப்போதும் பழகிய மதிப்பிற்குரிய நண்பர்.
அவரது இழப்பு அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு மட்டுமான இழப்பு அல்ல; தி.மு.க.வுக்கும், உரத்தநாடு வட்டார அனைத்து மக்களுக்குமே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சோகமாகும்.
அவரது மறைவினால் துயரமும், துன்பமும் அடையும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தி.மு.க.வினருக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
2.11.2026
சென்னை
.png)
13 hours ago
6




English (US) ·