பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்

1 hour ago 1

சென்னை: பிரபல இந்தியச் சமையல் கலைஞரும் தொலைக்காட்சி ஆளுமையுமான முனைவர் செஃப் தாமு, உடல்நலக் குறைவு காரணமாக இன்று (அக். 25) காலமானார். அவருக்கு வயது 72.

உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுச் செய்தி அறிந்து சமையல் துறையினர், திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சமையல் கலைக்குப் புதிய அடையாளத்தைத் தேடித்தந்தவர்களில் செஃப் தாமு முதன்மையானவர். சின்னத்திரை சமையல் நிகழ்ச்சிகள், நடுவர் பொறுப்புகள் மூலம் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே நீங்கா இடம்பிடித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் உணவக மேலாண்மை (ஹோட்டல் மேனேஜ்மெண்ட்) துறையில் முனைவர் பட்டம் வென்ற முதல் இந்திய சமையல் கலைஞர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

கடந்த 2010-ஆம் ஆண்டில், தொடர்ந்து 24 மணி நேரம், 30 நிமிடங்கள், 12 வினாடிகளுக்குள் 617 வகை உணவுகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். சமையல் துறைக்கு அவர் ஆற்றிய தனித்துவமான பங்களிப்பைப் போற்றும் வகையில், மத்திய அரசு கடந்த 2025-ஆம் ஆண்டு அவருக்கு உயரிய ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கிச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article