"தேனி சிறையில் கைதிகள் தப்பியோடியது அதிர்ச்சியளிக்கிறது" - மாணிக்கம் தாகூர்

11 hours ago 1

Last Updated:Oct 27, 2026 1:12 PM IST

சிறைத்துறையை முறையாகக் கண்காணிக்கத் தவறி, இத்தகைய பாதுகாப்புச் சீர்கேட்டிற்கு வழிவகுத்த உயர் மட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தமிழக அரசு பாரபட்சமின்றித் துறைசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்

தேனி சிறையில் காவலரைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"தேனி சிறையில் காவலரைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் கடுமையான கவலையையும் அளிக்கிறது! இது திடீரென நிகழ்ந்த ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல.

கடந்த 2023 யில் விழுப்புரத்திற்குப் பேருந்தில் கொண்டுசெல்லப்பட்டபோது இலங்கை கைதி ரியாஸ் கான் தப்பியோடியது, திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனைக் கைதி தப்பியது, 87 வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளி பாலமுருகன் போலீஸ் பிடியிலிருந்து மீண்டும் மீண்டும் தப்பியது, சேலத்திலிருந்து கோவைக்குக் கொண்டுசெல்லும்போது பெருந்துறை அருகே கைதி தப்பியது மற்றும் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் காவலர்களைத் தாக்கிவிட்டு 12 பேர் தப்பியோடியது எனத் தமிழகத்தில் ஏற்கனவே பலமுறை சிறைக் கைதிகள் தப்பிக்கும் தொடர் பாதுகாப்புக் குளறுபடிகள் அரங்கேறியுள்ளன.

முந்தைய நிகழ்வுகள் அனைத்தையும் உற்றுநோக்கினால், தமிழகச் சிறைத்துறையில், அதிலும் குறிப்பாகப் புறநகர் மற்றும் கிராமப்புற சிறைகளில் அடிப்படைக் கட்டமைப்புத் தொடர்ந்து பலவீனமாகவே இருந்து வருவது தெளிவாகிறது. கிராமப்புறச் சிறைகளில் உடனடி முறையான கட்டமைப்பு மாற்றங்களும், தீவிரச் சீர்திருத்தங்களும் மிக அவசியமாகத் தேவைப்படுகின்றன.


தேனி சிறையில் காவலரைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் கடுமையான கவலையையும் அளிக்கிறது!


இது திடீரென நிகழ்ந்த ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. கடந்த 2023 யில் விழுப்புரத்திற்குப் பேருந்தில் கொண்டுசெல்லப்பட்டபோது இலங்கை கைதி ரியாஸ் கான் தப்பியோடியது, திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனைக் கைதி தப்பியது, 87 வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளி பாலமுருகன் போலீஸ் பிடியிலிருந்து மீண்டும் மீண்டும் தப்பியது, சேலத்திலிருந்து கோவைக்குக் கொண்டுசெல்லும்போது பெருந்துறை அருகே கைதி தப்பியது மற்றும் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் காவலர்களைத் தாக்கிவிட்டு 12 பேர் தப்பியோடியது எனத் தமிழகத்தில் ஏற்கனவே பலமுறை சிறைக் கைதிகள் தப்பிக்கும் தொடர் பாதுகாப்புக் குளறுபடிகள் அரங்கேறியுள்ளன.

முந்தைய நிகழ்வுகள் அனைத்தையும் உற்றுநோக்கினால், தமிழகச் சிறைத்துறையில், அதிலும் குறிப்பாகப் புறநகர் மற்றும் கிராமப்புற சிறைகளில் அடிப்படைக் கட்டமைப்புத் தொடர்ந்து பலவீனமாகவே இருந்து வருவது தெளிவாகிறது. கிராமப்புறச் சிறைகளில் உடனடி முறையான கட்டமைப்பு மாற்றங்களும், தீவிரச் சீர்திருத்தங்களும் மிக அவசியமாகத் தேவைப்படுகின்றன.

சிறைத்துறையை முறையாகக் கண்காணிக்கத் தவறி, இத்தகைய பாதுகாப்புச் சீர்கேட்டிற்கு வழிவகுத்த உயர் மட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தமிழக அரசு பாரபட்சமின்றித் துறைசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தப்பியோடிய மற்ற கைதிகளை உடனடியாகப் பிடிப்பதோடு, புறநகர்ச் சிறைகள் உட்பட ஒட்டுமொத்தத் தமிழகச் சிறைத்துறையையும் முழுமையாக மறுசீரமைக்க உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்!

#TNCongress

— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) October 27, 2026

சிறைத்துறையை முறையாகக் கண்காணிக்கத் தவறி, இத்தகைய பாதுகாப்புச் சீர்கேட்டிற்கு வழிவகுத்த உயர் மட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தமிழக அரசு பாரபட்சமின்றித் துறைசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தப்பியோடிய மற்ற கைதிகளை உடனடியாகப் பிடிப்பதோடு, புறநகர்ச் சிறைகள் உட்பட ஒட்டுமொத்தத் தமிழகச் சிறைத்துறையையும் முழுமையாக மறுசீரமைக்க உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்!" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article