Last Updated:Oct 27, 2026 1:07 PM IST
வீடுகளில் அதிக மின் கட்டணம் வருவதாக எழும் பிரச்னைக்கு தீர்வு காண நுகர்வோரே சுயமாக மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் வசதியை மின் வாரியம் ஏற்படுத்த உள்ளது.

வீடுகளில் அதிக மின் கட்டணம் வருவதாக எழும் பிரச்னைக்கு தீர்வு காண, நுகர்வோரே சுயமாக மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் வசதியை மின் வாரியம் ஏற்படுத்த உள்ளது. தமிழகத்தில் வீடு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் இணைப் புகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, வீடுகளுக்கு சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை, பணியாளர்கள் கணக்கு எடுக்கின்றனர்.
பணியாளர்கள் பற்றாக்குறையால், சில இடங்களில் கணக்கு எடுக்க தாமதம் ஏற்படுகிறது. சிலர் நேரில் செல்லாமல் தாங்களே உத்தேசமாக கணக்கு எடுக்கின்றனர். இதனால், குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளிலும், அரசின் இலவச சலுகை கிடைக்காமல், அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. எனவே, மின் பயன்பாட்டை நுகர்வோரே சுயமாக கணக்கெடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, ஏற்கனவே உள்ள மின் வாரியத்தின் மொபைல் போன் செயலியில், அந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால், மின் பயன்பாடு கணக்கெடுக்க வேண்டிய, அதாவது, 60 நாட்கள் மற்றும் சலுகை காலமாக மூன்று நாட்கள் என, 63வது நாளில் நுகர்வோர் தங்கள் மொபைல் போனில் உள்ள மின் வாரிய செயலியில் மீட்டரை புகைப்படம் எடுக்க வேண்டும். அதில் யூனிட் அளவு பதிவானதும், புகைப்படம் எடுக்கும் பணி முடிவடையும்.
பின், அதை, அதிலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும். கணக்கு எடுக்கப்பட்ட மின் பயன்பாட்டு அளவு, முந்தைய மாத மின் பயன்பாட்டு அளவுடன் மென்பொருள் வாயிலாக ஒப்பீடு செய்யப்பட்டு, நடப்பு மாத அளவு இறுதி செய்யப்படும். பின், அதற்கான மின் கட்டணம் நுகர்வோருக்கு தெரிவிக்கப்படும். சுயமாக கணக்கெடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது. இதனால், அதிக மின் கட்டணம் வருவதாக கூறப்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்கின்றனர், மின் வாரிய அதிகாரிகள்.

Sivakumar | 85 வயதிலும் அதே சுறுசுறுப்பு எப்படி? நடிகர் சிவகுமார் பின்பற்றும் ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்!
இன்று தனது 85-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் நடிகர் சிவகுமார்.
இப்போதும் அவர் ஃபிட்டாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது எப்படி?
வயதானாலும் ஹெல்த்தியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
.png)








English (US) ·