ஆந்திரா​வில் தடியடி திருவிழாவில் பெண் உயிரிழப்​பு, 100 பேர் காயம்

1 hour ago 1

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் தேவரகட்டா பகுதியில் நடைபெற்ற பாரம்பரிய ‘தடியடி திருவிழா’வின்போது ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரு மலைவாழ் கிராம மக்களும் ஆண்டுதோறும் இரவில் ஓரிடத்​தில் கூடி, பின்னர் இரு பிரிவுகளாகப் பிரிந்து இவ்விழாவை நடத்துவர். மலைமீதுள்ள அம்மன் சிலையைத் தங்கள் கிராமத்தில் கொண்டுவந்து வைக்க இரு தரப்பும் போட்டியிடும்.

அம்​மன் சிலையை யார் கொண்​டு​போய் தங்​கள் கிராமத்தில் வைக்​கிறார்​களோ, அவர்​களின் ஊரில்​தான் அடுத்த ஆண்டு வரை அம்​மன் சிலை இருக்​கும்.

சிலையை மற்​றொரு கிராமத்​துக்​குக் கொண்டு செல்வதைத் தடுக்க கம்பு, கற்களால் தாக்கிக்கொள்வர். விடிய விடிய நடை​பெறும் இந்தத் திருவிழாவில் பெரியவர், சிறியவர், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி அனைவரும் கலந்துகொள்வர்.

பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும், இம்முறை நடைபெற்ற தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கர்னூல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Read Entire Article