Last Updated:Oct 23, 2026 6:31 PM IST
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சன்னரக அரசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30/-(பொட்டலத்துடன்) என்ற விலையில் சன்னரக அரிசி விற்பனை 17.10.2026 அன்று சென்னையில் முதற்கட்டமாக 30 இடங்களில் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்திற்காக மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 34 மாவட்டங்களில் செயல்படும் 184 கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு சன்னரக அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் கீழ்கண்டுள்ள விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சன்னரக அரிசி ரூ.30/-க்கும் மற்றும் தமிழக அரசின் அதிரடி விலை குறைப்பு நடவடிக்கையால் ஒரு கிலோ புழுங்கல் பொன்னி அரிசி ரூ.60/-க்கும், மளிகை பொருட்களான துவரம் பருப்பு ரூ.130/-க்கும், உளுத்தம் பருப்பு ரூ.140/-க்கும், பூண்டு ரூ.240/-க்கும், மல்லி(தனியா) ரூ.240/-க்கும், மிளகாய் ரூ.330/-க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பொதுமக்கள், விவசாயிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் துறை பணியாளர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மேலும் எளிதாகவும், விரைவாகவும் தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக தெரிவிக்கும் வகையில் பிரத்யேக வாட்ஸ்அப் (WhatsApp) எண்:9884000845 என்ற கூட்டுறவு துறையின் அதிகாரப்பூர்வ குறைதீர்வு எண்ணாக (Official Grievance Redressal Number) தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நீங்கள் வாங்கிய வெல்லம் தரமானதுதானா? கலப்பட வெல்லத்தை எப்படி கண்டுபிடிப்பது? ஈஸியான 3 வழிகள்!
சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பயன்படுத்துபவரா நீங்கள்?
நீங்கள் வாங்கும் வெல்லம், தரமானதுதான் என எப்படி கண்டறிவதென உங்களுக்கு தெரியுமா?
வீட்டிலேயே இதை கண்டறிய, எளிமையாக 3 வழிகள் உள்ளன.
.png)







English (US) ·