Last Updated:Oct 27, 2026 11:04 AM IST
இந்த உத்தரவை மீறி கள்ளச்சந்தையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் கிராமத்தில் வரும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவை நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலிகள் செலுத்துவார்கள்.
குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.
இதன் ஒரு நடவடிக்கையாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களுக்கு முழுமையாக அடைக்க மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த உத்தரவை மீறி கள்ளச்சந்தையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வீட்டில் செய்யும் பொங்கல் கெட்டியும் ஆகக்கூடாது, கரண்டியிலும் ஒட்டக்கூடாதா? கமகம சீக்ரெட் ரெசிபி!
நீங்கள் வீட்டில் செய்யும் வெண் பொங்கல், கரண்டியில் ஒட்டாமல் வர வேண்டுமா?
கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் பொங்கல் போல, தட்டோடு நழுவி விழவேண்டுமா?
அப்போ ரெசிபியின் இந்த சீக்ரெட்டை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
.png)








English (US) ·