மீன் வறுவல் என்றாலே உப்பு, காரம், மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் தான் சேர்ப்போம். ஆனால், பழங்குடியினர் செய்யும் நெல்லிக்காய் மீன் வறுவலை ட்ரை பண்ணியிருக்கீங்களா? இதில் சேர்க்கப்படும் ஒரு பொருள், மீனுக்கு அட்டகாசமான சுவையைத் தரும்.
16

Image Credit :
Youtube/ Vismai Food
ஊறவைத்த மீன் வறுவல்.! செஞ்சா பார்த்து சொல்லுங்க பார்ப்போம்.!
மீன் வறுவல் என்றாலே காரம், மஞ்சள், இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை அல்லது புளி சேர்த்த மசாலா தான் நினைவுக்கு வரும். ஆனால், பழங்குடியினர் செய்யும் இந்த மீன் வறுவல் கொஞ்சம் வித்தியாசமானது. காய்ந்த நெல்லிக்காய், மிளகு, வெந்தயம், பூண்டு, தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு ஸ்பெஷல் மசாலா தயாரிப்பார்கள். இதில் மீன் துண்டுகளை ஊறவைத்து தோசைக்கல்லில் மெதுவாக வறுத்தால்... வெளியே மொறுமொறுப்பாகவும், உள்ளே சாஃப்ட்டாகவும் இருக்கும் சூப்பரான மீன் வறுவல் ரெடி.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
26
Image Credit :
Youtube/ Vismai Food
தேவையான பொருட்கள்.!
750 கிராம் மீன் துண்டுகள், 1/3 கப் காய்ந்த நெல்லிக்காய், 2 டேபிள் ஸ்பூன் மிளகு, 1/4 டீஸ்பூன் வெந்தயம், 12 முதல் 15 பூண்டு பற்கள், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை மற்றும் உப்பு எடுத்துக்கொள்ளுங்கள். காரம் அதிகம் தேவைப்பட்டால் பச்சை மிளகாயும் சேர்த்துக்கொள்ளலாம்.
36
Image Credit :
Youtube/ Vismai Food
நெல்லிக்காயை இப்படி சேர்க்கனும்
முதலில் காய்ந்த நெல்லிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 1 முதல் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இரவே ஊறவைத்தாலும் நல்லது. பிறகு தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போடவும். அதோடு மிளகு, சிறிது உப்பு சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளுங்கள். காரம் தூக்கலாக வேண்டும் என்பவர்கள் இப்போது சில பச்சை மிளகாய்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
46
Image Credit :
Youtube/ Vismai Food
எதை இடிக்கனும்.! எதை எப்படி வறுக்கனும்.! சுவையின் ரகசியம் இதுதான்
இப்போது ஒரு சிறிய பேனில் வெந்தயத்தை மிதமான தீயில் வறுத்து, பொடியாக இடித்துக்கொள்ளவும். மற்றொரு பேனில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, பூண்டு பற்களை பொன்னிறமாக வறுக்கவும். அதில் நெல்லிக்காய் பேஸ்ட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு வெந்தயப் பொடி, 1/3 கப் தண்ணீர், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும். இது லேசாக கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு முழுமையாக ஆறவிடவும்.
56
Image Credit :
Youtube/ Vismai Food
மீனில் இறங்கும் நெல்லிக்காய் சுவை
சுத்தம் செய்த மீன் துண்டுகளில் இந்த மசாலாவை நன்கு தடவி, குறைந்தது 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும். அப்போதுதான் நெல்லிக்காய், மிளகு, பூண்டு சுவை மீனில் இறங்கும். பிறகு தோசைக்கல்லில் 5 முதல் 6 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மசாலா தடவிய மீன் துண்டுகளை ஒன்றோடொன்று ஒட்டாமல் கல்லில் வைக்கவும்.
66
Image Credit :
Youtube/ Vismai Food
மீன் வறுவல் வேற லெவலில் அட்டகாசமாக இருக்கும்
மிதமான தீயில் மூடி போட்டு 12 முதல் 15 நிமிடம் வேகவைக்க வேண்டும். பிறகு மூடியை எடுத்துவிட்டு, மீன் உடையாமல் மெதுவாக திருப்பிப் போடவும். மேலே சிறிது கறிவேப்பிலை தூவி, தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வறுத்து எடுக்கவும். வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்ட்டாகவும் வெந்ததும் அடுப்பை அணைத்துவிடலாம். சூடான ஸ்டார்ட்டராகவோ அல்லது சாதத்திற்கு சைட் டிஷ்ஷாகவோ சாப்பிட இந்த பழங்குடியினர் ஸ்டைல் மீன் வறுவல் அட்டகாசமாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
.png)
56 minutes ago
1




English (US) ·