Last Updated:Oct 24, 2026 7:07 PM IST
1876-1878 காலப்பகுதியில் நிகழ்ந்த மாபெரும் பஞ்சத்தை பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள வரலாற்று ஆக்ஷன் திரைப்படமான 'ரணபாலி' (Ranabaali) படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 16 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்றுள்ளது. தியேட்டருக்குச் சென்று பார்க்க முடியாத சினிமா ரசிகர்கள் இப்படத்தை எப்போது, எந்த ஓடிடி தளத்தில் காணலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ராகுல் சன்கிருத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் (Netflix) பெற்றுள்ளது.
வழக்கமாகத் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 6 முதல் 8 வார இடைவெளிக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் என்பதால், 'ரணபாலி' திரைப்படம் வரும் நவம்பர் 27 முதல் டிசம்பர் 11, 2026 வரையிலான காலக்கட்டத்திற்குள் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், படக்குழுவினரிடமிருந்து அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
1876-1878 காலப்பகுதியில் நிகழ்ந்த மாபெரும் சென்னை மாகாணப் பஞ்சத்தை பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ராயலசீமாவைச் சேர்ந்த சிங்கணமலை ரரணபாலி (விஜய் தேவரகொண்டா) தனது மக்களின் பசிப்பிணியைப் போக்கவும், கொடூரமான பிரிட்டிஷ் அதிகாரி சர் தியோடர் ஹெக்டரின் (ஆர்னால்ட் வோஸ்லூ) அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதையும் மையமாகக் கொண்டது.
தியேட்டர் வசூலைப் பொறுத்தவரை, ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்துடன் திரைக்கு வந்த இப்படம் உலகளவில் சுமார் ரூ. 52.40 கோடியை வசூலித்து குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீங்கள் வாங்கிய வெல்லம் தரமானதுதானா? கலப்பட வெல்லத்தை எப்படி கண்டுபிடிப்பது? ஈஸியான 3 வழிகள்!
சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பயன்படுத்துபவரா நீங்கள்?
நீங்கள் வாங்கும் வெல்லம், தரமானதுதான் என எப்படி கண்டறிவதென உங்களுக்கு தெரியுமா?
வீட்டிலேயே இதை கண்டறிய, எளிமையாக 3 வழிகள் உள்ளன.
.png)







English (US) ·