Man Vs. Wild: ``வீகன் உணவுக்கு மாறியதால் பலவீனமடைந்தேன்" - சாகச வீரர் பியர் கிரில்ஸ்

11 hours ago 1

வீகன் உணவுக்கு மாறியதால் பலவீனமடைந்தேன் எனப் பியர் கிரில்ஸ் தெரிவித்திருக்கிறார்.

Published:Just NowUpdated:Just Now

 பியர் கிரில்ஸ் (Bear Grylls)

பியர் கிரில்ஸ் (Bear Grylls)

பிரபல சாகச வீரரும், Man Vs Wild நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ்பெற்றவருமான பியர் கிரில்ஸ் (Bear Grylls) வீகன் உணவு மூலம்தான் பலவீனமடைந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் உடல் நலன் குறித்து பதிவிற்றிருக்கும் அவர், ``நான் கடந்த 5 ஆண்டுகள் வீகன் (Vegan) உணவை மட்டுமே சாப்பிட்டு வந்ததால் எனது உடலின் வலிமை கணிசமாகக் குறைந்துவிட்டது. கல்லீரல், இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்பு இறைச்சிகளை உணவில் சேர்த்துக் கொண்டதன் மூலம் அந்த இழப்பைச் சரிசெய்து வருகிறேன்.

எனக்கு இப்போது 52 வயதாகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது மிகவும் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் உணர்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

 பியர் கிரில்ஸ் (Bear Grylls)

பியர் கிரில்ஸ் (Bear Grylls)

பியர் கிரில்ஸின் இந்தத் திடீர் உணவு முறை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த பிரபல ஊட்டச்சத்து நிபுணர் கரிமா, ``உணவின் தரம், அளவு மற்றும் ஊட்டச்சத்துக்களின் சமநிலையே ஒருவரின் உடல் வலிமைக்கு முக்கியமே தவிர, அது தாவர அடிப்படையிலான உணவா அல்லது விலங்கு அடிப்படையிலான உணவா என்பது மட்டுமே காரணி அல்ல.

உறுப்பு இறைச்சிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்பதால், கல்லீரலில் உள்ள வைட்டமின் பி12, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்களும், இதய இறைச்சியில் உள்ள புரதமும் தசை இயக்கம் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது.

அதேவேளையில், வீகன் உணவு முறையைப் பின்பற்றும் அனைவருக்கும் தசை வலிமை குறையும் என்றோ அல்லது வலிமையைப் பெற உறுப்பு இறைச்சிகள் மட்டுமே அவசியம் என்றோ முடிவெடுக்க முடியாது. முறையான திட்டமிடலுடன் கூடிய வீகன் உணவு முறை மூலமும் உடற்பயிற்சிக்குத் தேவையான முழு வலிமையையும் பெற முடியும்.

சோயா பொருட்கள், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, விதைகள் போன்ற தாவர உணவுகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது. எனினும், வீகன் உணவைப் பின்பற்றுபவர்கள் வைட்டமின் பி12, இரும்புச்சத்து, வைட்டமின் டி, கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

உணவு

உணவுfreepik

குறிப்பாக தாவர உணவுகளில் வைட்டமின் பி12 இயல்பாகக் கிடைக்காது என்பதால் மருத்துவரின் ஆலோசனையோடு சேர்க்கை மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது. இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது சோர்வு மற்றும் உடற்பயிற்சி செய்யும் திறன் குறைதல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்வதே உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read Entire Article