Last Updated:Oct 30, 2026 6:59 PM IST
தீபாவளி அன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா? என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை நியூஸ் 18 தமிழ்நாட்டுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (29.10.26) தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (30.10.26) காலை 08:30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) 31 ம் தேதி வாக்கில் வலுப்பெறக்கூடும்.
அதன் பிறகு, அடுத்த 2 நாட்களில் இது மேற்கு-வடமேற்கு திசையில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.” என்று அந்த அறிவிப்பில் கூறியிருந்தது.
இந்நிலையில், தீபாவளி அன்று தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேட்டி அளித்த அவர், வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 37 சதவீதம் அதிகமாக பெய்திருப்பதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய துரை, நவம்பர் மாதத்தில் மழைப்பொழிவு எந்த அளவில் இருக்கும் என்பது குறித்து விளக்கினார்.
மேலும் எல் நினோ காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்கக்கடல் மேற்பரப்பில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை கூறினார்.

சரியும் கருவுறுதல் விகிதம்... சீனாவை தொடர்ந்து இந்தியாவிற்கும் ஆபத்து? மக்கள் தொகை குறைந்தால் என்ன ஆகும்?
மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில், தற்போது மக்கள் தொகை குறைந்து வருகிறது.
இதனால் உழைக்கும் வயதினர் எண்ணிக்கை குறைந்து, முதியோர் எண்ணிக்கை உயர்கிறது.
இந்தப் பட்டியலில் சீனாவை தொடர்ந்து இந்தியாவும் இப்போது சேர்ந்து வருகிறது.
.png)







English (US) ·