Last Updated:Oct 30, 2026 7:59 PM IST
நாடு முழுவதும் 7,278 காட்சிகளுக்கு சுமார் 3.52 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணம் பார்ட் 1’ (Ramayana Part 1) திரைப்படத்தின் முன்பதிவு குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன.
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணம் பார்ட் 1' திரைப்படம் நவம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் முன்-வெளியீட்டு முன்பதிவு வசூல் இந்தியாவில் மட்டும் ரூ. 17.67 கோடியைக் கடந்துள்ளது (Blocked seats உட்பட).
நாடு முழுவதும் 7,278 காட்சிகளுக்கு சுமார் 3.52 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. பிளாக் செய்யப்பட்ட இருக்கைகளைத் தவிர்த்து, நேரடி முன்பதிவு வசூல் ரூ. 14.75 கோடியாக உள்ளது.
இந்த முன்பதிவு வசூலில் இந்தி பதிப்பு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது. இந்தியில் ரூ. 14.56 கோடி (மொத்த வசூலில் 82%), கன்னடம்: ரூ. 2.39 கோடி (14%), தெலுங்கு: ரூ. 64.40 லட்சம் (4%), தமிழ்: ரூ. 7.49 லட்சம் வசூலித்துள்ளது.
சுமார் ரூ. 4,000 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இத்திரைப்படத்தில், ரன்பீர் கபூர் (ராமர்), சாய் பல்லவி (சீதை), யஷ் (இராவணன்), சன்னி தியோல் (ஹனுமான்), ரவி துபே (லக்ஷ்மணன்), லாரா தத்தா, அருண் கோவில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் விவேக் ஓபராய் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
.png)







English (US) ·