Last Updated:Oct 30, 2026 7:31 PM IST
தமிழர் ஒருவர் பிரதமராக ஆவதற்கு எப்போதும் வாய்ப்புகள் உண்டு என்று துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஆகியோர் இன்று மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார்.
தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம், “தமிழர் ஒருவர் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?” என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கொடுத்த துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், “ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு தமிழர் பிரதமராக ஆவதற்கு எப்போதும் வாய்ப்புகள் உண்டு. கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர், குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகியிருக்கும் நிலையில், இதற்கும் என்றைக்கும் வாய்ப்பு உண்டு. இந்தியா விரைவில் ஒரு வல்லரசாக மாறும்” எனத் தெரிவித்தார். இந்தப் பேட்டியின் போது துணைக் குடியரசுத் தலைவருடன் அமைச்சர் ஜெகதீஸ்வரியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
VIDEO | Madurai: "There are always chances for a Tamil person to become Prime Minister in a democratic nation. India will soon become a superpower," Vice President CP Radhakrishnan says after visiting the Meenakshi Amman Temple.
Governor Rajendra Arlekar and Tamil Nadu Minister Jagadeshwari also accompanied the Vice President.
— Press Trust of India (@PTI_News) October 30, 2026
2026ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் தவெக ஆட்சி அமைத்து முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றதைத் தொடர்ந்து, அவர்தான் அடுத்த பிரதமர் என அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
குறிப்பாக தேசிய அளவில் தற்போது இந்தியா கூட்டணியில் தவெக இணைந்துள்ள சூழலில், பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என காங்கிரஸ் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தவெகவினர் இப்படியாக கருத்தை தெரிவிப்பது அவ்வப்பொழுது அரசியலில் கவனம் பெற்றுவருகிறது. இந்தநிலையில் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் இந்தக் கருத்து கவனிக்கப்படுகிறது.
.png)







English (US) ·