Last Updated:Oct 24, 2026 4:42 PM IST
அரசியல் என்ட்ரி எப்போது என்பது குறித்து நடிகை த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசியல் என்ட்ரி எப்போது என்பது குறித்து நடிகை த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ படத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. முன்னதாக அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வம்பரா’, ‘ராம்’ ஆகிய 2 படங்களும் நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் உள்ளனர். தற்போது த்ரிஷா புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராதிகா, அபர்ணா பாலமுரளி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அதன் பிறகு த்ரிஷா நடிக்கும் படங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. இதனால் அவர் சினிமாவிலிருந்து விலகுகிறாரா? என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரும் மறுப்பு தெரிவித்திருந்தார். சினிமாவிலிருந்து விலகி அரசியலில் த்ரிஷா என்ட்ரி கொடுக்கலாம் என பல்வேறு யூகங்கள் பேசப்படுகின்றன.
#WATCH | அரசியலுக்கு வருவீங்களா?..த்ரிஷா கொடுத்த ரியாக்ஷன்
#trisha #kovai #News18TamilNadu https://t.co/OHdkgkA1b3
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 24, 2026
இந்நிலையில், கோவை விமான நிலையத்துக்கு வந்த த்ரிஷாவிடம், “வருங்காலத்தில் அரசியலுக்கு வருவீங்களா மேடம்?” என கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்தபடியே எந்த பதிலும் சொல்லாமல் காரில் ஏறிச் சென்றார் த்ரிஷா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
.png)






English (US) ·