ஓப்போ நிறுவனம் தனது புதிய ‘ஓப்போ என்கோ எக்ஸ்4’ ட்ரூ வயலெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
15

ஒப்போ என்கோ X4 TWS இயர்பட்ஸ்
சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒப்போ நிறுவனம் தனது புதிய ‘ஒப்போ என்கோ எக்ஸ்4’ (Oppo Enco X4) ட்ரூ வயலெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் களமிறக்கியுள்ளது. 11 மிமீ டைனமிக் டிரைவர்கள், 6 மிமீ ட்வீட்டர்கள், ஹாய்-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் ஆதரவு மற்றும் அதிநவீன ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) போன்ற பிரீமியம் அம்சங்களுடன் இந்த இயர்பட்ஸ் வந்துள்ளது.
சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தம் 53 மணி நேரம் வரை தொடர்ச்சியான பிளேபேக் வழங்கும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த என்கோ எக்ஸ்4 இயர்பட்ஸுடன் இணைந்து ஒப்போ பைண்ட் X10, பைண்ட் X10 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஒப்போ பேட் மினி ஆகிய புதிய சாதனங்களையும் இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
விலை & விற்பனை விபரம்
இந்திய சந்தையில் ஒப்போ என்கோ எக்ஸ்4 இயர்பட்ஸின் விலை ரூ. 19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அரோரா வயலட் (Aurora Violet) மற்றும் கிளேசியர் ஒயிட் (Glacier White) ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ. 1,667 வீதம் ஈஎம்ஐ (EMI) முறையில் இதை வாங்கிக்கொள்ளலாம்.
தற்போது ஒப்போ இந்தியா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ. 18,999 என்ற சிறப்பு விலையில் இதன் ப்ரீ-ஆர்டர் (Pre-order) முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் நேரடி விற்பனை வரும் அக்.29-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
35
சிறப்பம்சங்கள் & தொழில்நுட்ப விபரங்கள்
ஒப்போ என்கோ எக்ஸ்4 இயர்பட்ஸில் 11 மிமீ டைனமிக் வூஃபர்கள் மற்றும் 6 மிமீ ட்வீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஹாய்-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ (Spatial Audio) தொழில்நுட்பத்தை முழுமையாக ஆதரிக்கிறது. மேலும், AAC, SBC, LHDC மற்றும் LC3 போன்ற பல்வேறு ஆடியோ கோடெக்குகளுடன் (Codecs) இது இணக்கமானது. இதில் உள்ள ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) தொழில்நுட்பம் டீப், மீடியம், லைட் மோடுகள் மற்றும் டிரான்ஸ்பரன்சி, அடாப்டிவ் மோடுகளைக் கொண்டுள்ளது. அன்றாடச் சத்தத்தில் கிட்டத்தட்ட 99.8% சத்தத்தைத் தடுத்து நிறுத்தக்கூடிய திறன் இதற்கு உண்டு என ஒப்போ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழைப்புகளின் தெளிவுத்திறனை மேம்படுத்த, ஒவ்வொரு இயர்பட்ஸிலும் மூன்று சிலிகான் மைக்ரோஃபோன்கள் மற்றும் ஒரு VPU மைக்ரோஃபோன் என மொத்தம் 4 மைக்ரோஃபோன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஏ.ஐ அடிப்படையிலான கால் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியும் இதில் அடங்கும். இணைப்பு வசதியைப் பொறுத்தவரை, இது புளூடூத் 6.1 (Bluetooth 6.1) ஆதரவைக் கொண்டுள்ளதால், ஒரே நேரத்தில் 2 சாதனங்களுடன் இணைக்க முடியும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் தடையின்றி இயங்கும்.
45
பேட்டரி பேக்கப் மற்றும் சார்ஜிங் திறன்
ஒவ்வொரு இயர்பட்ஸும் 65mAh பேட்டரியைக் கொண்டுள்ள நிலையில், சார்ஜிங் கேஸ் 576mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. AAC கோடெக் பயன்படுத்தி, ANC ஆஃப் செய்யப்பட்டு இருக்கும்போது, ஒரே சார்ஜில் இயர்பட்ஸ் மூலம் 13 மணி நேரமும், கேஸுடன் சேர்த்து மொத்தம் 53 மணி நேரமும் பேட்டரி பேக்கப் கிடைக்கும் என ஒப்போ கூறுகிறது. அதேசமயம், LHDC ஆன் செய்யப்பட்டு இருக்கும்போது இயர்பட்ஸ் மூலம் 10 மணி நேரமும், கேஸுடன் சேர்த்து 42 மணி நேரமும் பேட்டரி நீடிக்கும்.
இதன் சார்ஜிங் கேஸ் யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய இரண்டையுமே ஆதரிக்கிறது. வயர் மூலம் சார்ஜ் செய்யும்போது இயர்பட்ஸ் முழுமையாக ஏற சுமார் 55 நிமிடங்களும், கேஸ் முழுமையாக ஏற சுமார் 65 நிமிடங்களும் ஆகும்.
55
எடை & வடிவமைப்பு
ஒவ்வொரு இயர்பட்ஸும் வெறும் 5.6 கிராம் எடையைக் கொண்டுள்ளதோடு, IP55 தரத்திலான தூசு மற்றும் நீர் எதிர்ப்புச் சக்தியைக் (Dust and water resistance) கொண்டுள்ளது. சார்ஜிங் கேஸின் எடை 41.8 கிராம் ஆகும். இரண்டும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 53 கிராம் எடையைக் கொண்டுள்ளன. இயர்பட்ஸின் அளவு 32.11 x 18.19 x 21.03 மிமீ ஆகவும், கேஸின் அளவு 63.40 x 49.50 x 25.55 மிமீ ஆகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
.png)
1 hour ago
2






English (US) ·