கோலாலம்பூர்: வலுவான தொழில்நுட்ப ஏற்றுமதிகள் பொருளியல் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், 2027ஆம் ஆண்டில் மலேசியாவின் பொருளியல் 5.1 விழுக்காடு வளர்ச்சி காணும் என ‘எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ்’ தரமதிப்பீட்டு நிறுவனம் முன்னுரைத்துள்ளது.
இவ்வாண்டின் 5.5 விழுக்காட்டு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது சற்று மிதமான வளர்ச்சியாகும். உயர்ந்துள்ள எரிசக்தி விலை, அதிகரித்து வரும் உலகளாவிய வட்டி விகிதம் ஆகியவற்றால் ஏற்படும் வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியிலும், தொழில்நுட்பத் துறையின் தொடர்ச்சியான வலிமையைக் குறிப்பிட்டு மலேசியாவுக்கான தனது வளர்ச்சி முன்னுரைப்புகளை அந்நிறுவனம் மாற்றமின்றித் தக்கவைத்துள்ளது.
ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் பொருளியல் வளர்ச்சி 2026ஆம் ஆண்டின் 4.8 விழுக்காட்டிலிருந்து 2027ல் 4.4 விழுக்காடாகக் குறையும் என ‘எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ்’ மதிப்பிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டிற்கான ஆசிய-பசிபிக் மொத்த உள்நாட்டு உற்பத்தி முன்னுரைப்பு கடந்த செப்டம்பரில் கணிக்கப்பட்டதைப் போலவே 4.4 விழுக்காடாகத் தொடர்கிறது என்றும் ஹாங்காங்கிற்கான வளர்ச்சி முன்னுரைப்பில் கணிசமான உயர்வும் பிலிப்பீன்சுக்கான முன்னுரைப்பில் குறிப்பிடத்தக்க சரிவும் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 2027ல் வட்டாரத்தின் மிக வேகமாக வளரும் பொருளியலாக வியட்னாமும் இந்தியாவும் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில்நுட்ப ஏற்றுமதிகளின் வலுவான ஆதரவுடனும் சீனாவுக்கு வெளியே நிலவும் பொதுவான வலுவான உள்நாட்டுத் தேவையுடனும் இவ்வட்டாரம் மீள்திறனுடன் நீடிக்கும் என அறிக்கை குறிப்பிடுகிறது.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு முதலீட்டுப் பெருவளர்ச்சியானது மலேசியா, சீனா, சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், தாய்லாந்து, வியட்னாம் உள்ளிட்ட தொழில்நுட்ப ஏற்றுமதிப் பொருளியல் நாடுகளில் விரைவான ஏற்றுமதி வளர்ச்சியைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
உள்நாட்டுத் தரவு நிலையங்களின் கட்டுமானமும் பொருளியல் வளர்ச்சிக்குத் துணைபுரிந்து வருவதோடு, தொழில்நுட்ப ஏற்றுமதிப் பெருவளர்ச்சி உள்நாட்டு முதலீடுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. 2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மலேசியா, ஹாங்காங், தென்கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் முதலீட்டு நடவடிக்கைகள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
.png)






English (US) ·