தீபத்தூண் மற்றும் நெல்லித்தோப்பு பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதோடு, 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
2 Min read
Published : Nov 23 2026, 03:19 PM IST
15

Image Credit :
Asianet News
மலை தீபத்தூண் விவகாரம்: உச்சக்கட்ட பாதுகாப்பில் திருப்பரங்குன்றம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை மற்றும் தீபத்தூண் பகுதி முழுவதும் காவல்துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை & 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள்
திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் விழா நாளை செவ்வாய்க்கிழமை (நவ. 24) நடைபெற உள்ளது. இந்த ஆண்டு மலை உச்சியில் உள்ள நில அளவைக் கல் (சர்வே தூண்) மீது தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், உச்சிப் பிள்ளையார் கோயில், நெல்லித்தோப்பு மற்றும் மலைக்குச் செல்லும் படிக்கட்டுப் பாதை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்கள் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனர்.
35
நவீன கண்காணிப்பு & துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
மலைப் பாதை மற்றும் தூண் அமைந்துள்ள பகுதிகளைக் கண்காணிக்க, கடந்த ஆண்டை விடக் கூடுதலாக 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அத்துடன், சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அதிநவீன 'முகத்தைக் கண்டறியும் கேமராக்களும்' (Face Recognition Cameras) பொருத்தப்படுகின்றன. மலை அடிவாரம் முதல் உச்சி வரை கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் நிர்வாக அலுவலகமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் உள்ளது.
45
வழக்கின் பின்னணியும் தமிழக அரசின் சீராய்வு மனுவும்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி, கடந்த ஆண்டு இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையை நேரில் ஆய்வு செய்த பின்னர் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தார். இதனை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சும் உறுதி செய்த நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளை (24.11.2026) கார்த்திகை தீபத் திருநாள் அன்று ஒரு நாள் மட்டும் கடும் நிபந்தனைகளுடன் தீபத்தூணில் தீபம் ஏற்றவும், அது தொடர்பான அறிக்கையை மூன்று தினங்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை இந்து அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
55
ஆர்ப்பாட்டம், பேரணிக்குத் தடை - தடையை மீறுவதாக அறிவிப்பு
இச்சூழலில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக இன்று மாலை மதுரையில் வி.சி.க தலைவர் திருமாவளவன், ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்கும் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், மதுரை கிரைம் பிராஞ்ச் சந்திப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றக் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி, இந்த அமைதிப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகிய இரண்டிற்கும் மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. எனினும், தடையை மீறி அமைதிப் பேரணி நடைபெறும் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். காவல்துறையின் இந்தப் பலத்த பாதுகாப்புக்கு இடையே, நாளை (24.11.2026) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பையும் சஸ்பென்ஸையும் ஏற்படுத்தியுள்ளது.
.png)
11 minutes ago
1





English (US) ·