ஹீரோவாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்…? இயக்குநர் யார் தெரியுமா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 

1 hour ago 1

Last Updated:Oct 30, 2026 7:29 PM IST

ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 

ஜேசன் சஞ்சய்
ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

‘சிக்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன் நாயகனாக நடித்த இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ஜேசன் சஞ்சய் தொடர்ந்து படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அவர் தனது தந்தையின் பாதையையே தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ‘டியூட்’ படம் மூலம் கவனம் பெற்ற கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை அட்லீ தயாரிக்க இருப்பதாகவும் அது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அந்த பணிகளுக்கு இடைவெளி விட்டு, ஜேசன் சஞ்சய் படத்தை இயக்க இருக்கிறார் கீர்த்திஸ்வரன். இந்தப் படம் முடிந்த பிறகு அவர் சிம்புவை இயக்குவார் என கூறப்படுகிறது.

Read Entire Article