பெங்களுரு, அக். 31 உள்நாட்டிலேயே தயாரிக் கப்பட்ட அதிநவீன என்விஎஸ்-03 வழிகாட்டி செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி – எஃப் 18 ராக்கெட் வெற்றிகரமாக நேற்று (30.10.2026) நள்ளிரவு விண்ணில் ஏவப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட புவி வட்டப் பாதையில் செயற்கைக் கோள் நிலை நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து இந்தத் திட்டம் வெற்றி பெற்றாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனா்.
இதன்மூலம் இனிவரும் காலங்களில் பாதுகாப்புத் துறை, பொதுமக்கள் பயன்பாடு மற்றும் தொலைத் தொடா்பு நடவடிக்கைகளில் துல்லியமான வழிகாட்டுதல் களை (நேவிகேஷன்) பெற முடியும்.
அமெரிக்காவைப் போன்றே இந்தியாவிலும் தரைவழி, கடல் வழி, வான்வழிப் போக்கு வரத்து மற்றும் பாதுகாப்பு பயன் பாட்டுக்கு உதவும் மண்டல வழிகாட்டுதல் செயற்கைக் கோள் அமைப்பை (அய்ஆா்என்எஸ்எஸ்) இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
இதற்காக ரூ.1,420 கோடியில் அய்ஆா்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எஃப், 1ஜி என 7 செயற்கைக்கோள்கள் வடிவமைக் கப்பட்டு, அவை கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை யான கால கட்டங்களில் வெற்றி கரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.
அந்த வசதி வாயிலாகவே தற்போது நாட்டின் கண் காணிப்புப் பணிகள், வழித்தட மேப்பிங் சேவைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு அடுத்த கட்டமாக, மேம்படுத்தப்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் நிலை நிறுத்த திட்டமிட்டு, கடந்த 2023-இல் என்விஎஸ் 01 மற்றும் 2025-இல் என்விஎஸ் 02 செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன.
தற்போது அவற்றுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ் 03 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து ஜிஎஸ்எல்வி எஃப் 18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முடிவு செய்தனா். அதற்கான 24 மணி நேர கவுன்ட் டவுன் 29.10.2026 அன்று இரவு தொடங் கியது.
தொடா்ந்து, ஆந்திர மாநிலம், சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மய்யத்தின் 2-ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப் 18 ராக்கெட் நேற்று நள்ளிரவு 11.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
தரையில் இருந்து புறப்பட்ட 18.40 நிமிஷங்களில் குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டா் தொலைவும், அதிகபட்சம் 37,023 கிலோ மீட்டா் தொலைவும் கொண்ட புவி வட்டப் பாதை யில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது.
என்விஎஸ் 03 செயற்கைக் கோளானது 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட் காலம் 10 ஆண்டுகள். இதில் எல் 1, எல் 5 எஸ் பேண்ட் டிரான்ஸ் பான்டா்கள், உள்நாட்டுத் தொழில் நுட்பத் தில் தயாரான ரூபிடியம் அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு அதிநவீன தொழில் நுட்ப கருவிகள் இடம் பெற் றுள்ளன.
பயன்பாடு என்ன?
என்விஎஸ்-03 செயற்கைக் கோளானது இந்திய நிலப்பரப்பு மற்றும் எல்லை களைக் கடந்து 1,500 கி.மீ. பரப்பளவுக்கு துல் லியமான வழிகாட்டி மேப்பிங் சேவை களை வழங்கும். தரை, கடல், வான்வெளிப் போக்கு வரத்தைக் கண்காணிக்கும். பேரிடா் காலங்களில் துல்லியத் தகவல்களைத் தெரிவிக்கும். அதில் அதி நவீன அலை வரிசை சிக்னல்கள் பொருத்தப் பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தும் அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்) மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களிலும் மேப்பிங் சேவையைப் பெற லாம். ரயில்வே துறை மற்றும் ராணு வம் சார்ந்த பாதுகாப்பு நட வடிக்கைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
.png)
57 minutes ago
1






English (US) ·