Last Updated:Aug 02, 2026 1:11 PM IST
தாங்கள் வெளியிட்ட வீடியோ சர்ச்சையான நிலையில், அதில் குறிப்பிட்ட பகுதியை பரிதாபங்கள் யூடியூப் குழுவினர் நீக்கியுள்ளனர்.

தாங்கள் வெளியிட்ட வீடியோ சர்ச்சையான நிலையில், அதில் குறிப்பிட்ட பகுதியை பரிதாபங்கள் யூடியூப் குழுவினர் நீக்கியுள்ளனர்.
சமூகத்தில் அன்றாடம் நிகழும் பல்வேறு சம்பவங்களை கேலி, கிண்டல் மற்றும் நகைச்சுவையுடன் யூ டியூப்பில் வீடியோவாக வெளியிட்டு வருபவர்கள் பரிதாபங்கள் குழுவினர். கோபி, சுதாகர் உள்ளிட்டோர் நடத்தும் இந்த குழு சமீபத்தில் ஆடி மாத பாவங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டனர்.
அதில், அண்மையில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் மகன் அளித்த பேட்டி குறித்து விமர்சிக்கப்பட்டதாகத் தெரிகிறது.இதற்கு பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
குறிப்பாக, தன் தந்தைக்கு எதிராக நடந்த ஒரு சட்டவிரோதமான செயலுக்குப் பிறகு, தன் வேதனையை வெளிப்படுத்த முயலும் ஒரு சிறுவனை, பரிதாபங்கள் யூடியூப் சேனல் கிண்டல் செய்திருப்பதைப் பார்ப்பதற்கு அருவருப்பாய் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவிட்டிருந்தார். இதையடுத்து அந்த குறிப்பிட்ட காட்சியை மட்டும் நீக்கியுள்ள பரிதாபங்கள் குழு, அந்த காணொலிக்காக வருத்தம் தெரிவித்துள்ளது.
.png)



English (US) ·