Last Updated:Aug 02, 2026 7:24 PM IST
தில்லியில் போராடச் சென்ற தமிழக விவசாயிகளை நாக்பூரில் மராட்டிய காவல்துறை தடுத்து நிறுத்தியது அத்துமீறல். மராட்டிய அரசை தமிழ்நாடு அரசு கண்டிக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி, “தில்லியில் போராட ரயிலில் சென்ற தமிழக உழவர்களை நாக்பூரில் மராட்டிய காவல்துறை இறக்கிவிட்டது அத்துமீறிய செயல். இதற்கு மராட்டிய அரசை தமிழ்நாடு அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தில்லியில் போராட ரயிலில் சென்ற தமிழக உழவர்களை நாக்பூரில் மராட்டிய காவல்துறை இறக்கிவிட்டது அநீதி. மராட்டிய அரசை தமிழக அரசு கண்டிக்க வேண்டும்.
காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து தில்லியில் நாளை மறுநாள் மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக தொடர்வண்டி மூலம் சென்ற காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை மராட்டிய மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இறக்கி விட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
தமிழக உழவர்கள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது; கண்டிக்கத்தக்கது. மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்தும் அனைத்து உரிமைகளும் தமிழக விவசாயிகளுக்கு உண்டு. அவர்களின் போராட்டத்தைத் தடுப்பதற்காக அவர்களை மராட்டிய காவல்துறை தடுத்து நிறுத்தி இறக்கி விட்டது மனித உரிமை மீறல் ஆகும்.
தில்லியில் போராட ரயிலில் சென்ற தமிழக உழவர்களை நாக்பூரில் மராட்டிய காவல்துறை இறக்கிவிட்டது அநீதி: மராட்டிய அரசை தமிழக அரசு கண்டிக்க வேண்டும்!
காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 2, 2026
அதுமட்டுமின்றி, இது தமிழ்நாட்டின் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. தில்லிக்கு தொடர்வண்டியில் பயணம் செய்த விவசாயிகளை எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று மராட்டிய அரசிடமும், காவல்துறையிடமும் தமிழக அரசு விளக்கம் கேட்க வேண்டும். அத்துமீறிய இந்த செயலுக்காக மராட்டிய அரசை தமிழ்நாடு அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
.png)



English (US) ·