Last Updated:Aug 02, 2026 3:13 PM IST
தயானிதி மாறன் வாய் வசனம் பேசுவதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. தயாநிதி மாறன், “நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள். தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமையைக் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்” எனத் தெரிவித்து ராகுல் காந்தியை விமர்சித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “வாய் வசனம் பேசுவதை தயாநிதி மாறன் நிறுத்த வேண்டும். மக்கள் இதன் காரணமாகவே உங்களை உட்கார வைத்திருக்க வேண்டிய இடத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
“நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள். தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமையைக் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் மேகதாது அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள்.
நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தேர்வில் முறைகேடு நடப்பதாக மட்டும் பேசுகிறவர்கள் துரோகிகள். பாஜகவின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெகவின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே.
நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்!
தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு #CauveryRights குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்!
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் #MekedatuDam-க்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள்!#NEET தேர்வு முறையையே ரத்து…
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) August 2, 2026
ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து X-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே. டெல்லி போலீசுக்குச் சற்றும் குறைவில்லாமல், தமிழ்நாடு போலீசும் நீட் போராட்ட மாணவர்கள் மீது அராஜகத் தாக்குதலை நடத்தியதைக் கண்டிக்காததும் துரோகத்தின் உச்சமே. தமிழ்நாட்டுக்கு வந்து ஒருவர் அரசியல் பாடம் எடுத்ததைப் படித்தபோது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது. அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர், “நம்பிக்கையை யார் விற்கிறார்கள் என்பது அடுத்த வாரம், 17ஆம் தேதி தெரிந்துவிடும். வாய் வசனம் பேசுவதை தயாநிதி மாறன் நிறுத்த வேண்டும். மக்கள் இதன் காரணமாகவே உங்களை உட்கார வைத்திருக்க வேண்டிய இடத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லாமலையா ராகுல் காந்தி இங்குவந்து பேசிவிட்டு சென்றிருக்கிறார். தொகுதி மறுவரையறை, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பெரிய பிரச்சனை அது குறித்து பேசியுள்ளார். ராகுல் காந்தி வந்த நேரம் மழை பெய்தது. அதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
.png)



English (US) ·