வங்கி மேலளார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அழகிரி மகள் கயல்விழி மனு தாக்கல்

18 minutes ago 1

Last Updated:Nov 23, 2026 5:33 PM IST

முன்னாள் அமைச்சர் அழகிரி மகள் கயல்விழியை அவமதித்த வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கயல்விழி அழகிரி
கயல்விழி அழகிரி

தன்னை அவமதிக்கும் வகையில் பேசிய வங்கிக் கிளை மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் கயல்விழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை அடையாறு கஸ்தூா்பா நகா் 3-ஆவது பிரதான சாலையில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டடத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் என்ஆா்ஐ கிளை இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்தில் உள்ள மின்தூக்கி (லி‘ஃ‘ப்ட்) பழுதடைந்தது குறித்து கயல்விழியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வங்கிக் கிளை மேலாளர் குரலை உயர்த்தி கத்தியதாகக் கூறப்பபடுகிறது.

இதுகுறித்து, விளக்கம் அளிக்க ஜூலை 20-ஆம் தேதி வங்கிக் கிளை மேலாளர் ஹர்ஷின் சிங்-கை சந்திக்க சென்றபோது, அனைவரும் முன்னிலையிலும் தன்னை அவதூறாகவும், அவமரியாதையுடன் திட்டியதாக கயல்விழி அழகிரி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்யவும், கண்காணிப்புக் கேமிரா பதிவுகளை பத்திரப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி கயல்விழி அழகிரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது,வங்கி மேலாளர் ஹர்ஷின் சிங்-கை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளார்.

இதனிடையே வங்கிக் கிளை மேலாளரை தாக்கியதாக கயல்விழி அழகிரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், சாஸ்திரி நகர் போலீஸார், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சைதாப்பேட்டை 9-ஆவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article