ஆதார் கார்டில் இந்த மாற்றத்தை உடனே பண்ணுங்க!... செப். 30 வரை இலவசம்... UIDAI அறிவிப்பு!

20 minutes ago 1

Last Updated:Nov 23, 2026 5:40 PM IST

Aadhaar | 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் பதிவின்போது கைரேகை, கருவிழி ஆகிய தரவுகள் பதிவுசெய்யப்படுவதில்லை. குழந்தைகள் வளரும்போது அவர்களது கைரேகைகள், கருவிழிப் படலங்கள் மற்றும் முக அமைப்பில் இயல்பாகவே பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன - UIDAI

5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் அட்டையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டாய பயோமெட்ரிக் தரவுப் புதுப்பிப்பை 2027 செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கட்டணமின்றி இலவசமாக மேற்கொள்ளலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது.

aadhaar (Representative/File Photo)

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் பதிவின்போது கைரேகை, கருவிழி ஆகிய தரவுகள் பதிவுசெய்யப்படுவதில்லை. குழந்தைகள் வளரும்போது அவர்களது கைரேகைகள், கருவிழிப் படலங்கள் மற்றும் முக அமைப்பில் இயல்பாகவே பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகள் அவர்களின் உடல் வளர்ச்சிக்கு ஏற்பப் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்ய, 5 வயதை நிறைவு செய்யும்போதும், மீண்டும் 15 வயதை எட்டும்போதும் பயோமெட்ரிக் தரவுகளைப் புதுப்பிக்க வேண்டியதை UIDAI கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஆதார் அங்கீகார நடைமுறைகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க முடியும் என்றும், உரிய வயது வரம்பிற்குள் இந்தப் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளுமாறும் UIDAI அறிவுறித்தியுள்ளது.

உரிய காலத்தில் பயோமெட்ரிக் தரவுகளைப் புதுப்பிப்பதன் மூலம், ஆதார் அடிப்படையிலான பல்வேறு சேவைகளைப் பெறுவதிலும், பள்ளி மற்றும் உயர்கல்வி சேர்க்கை நடைமுறைகள், போட்டித் தேர்வுகள், கல்வி உதவித்தொகைகள் போன்ற பல்வேறு வாய்ப்புகளுக்கான அங்கீகாரத்தின்போதும் எவ்வித சிரமமும் இன்றி குழந்தைகள் பயனடைய முடியும்.

5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான இந்தக் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகளை எந்தவிதக் கட்டணமுமின்றி இலவசமாக மேற்கொள்வதற்கான கால அவகாசத்தை 2027 செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து UIDAI வழிவகை செய்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் வழக்கமான சிறப்புப் புதுப்பித்தல் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதால், பெற்றோர் கூடுதல் செலவு ஏதுமின்றி தங்கள் குழந்தைகளின் பள்ளிகளிலேயே ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

ஆதார் சேவை மையங்கள்

பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்படும் இந்த முகாம்களைப் பெற்றோர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், முகாம்கள் நடைபெறும் கால அட்டவணை மற்றும் ஏற்பாடுகள் குறித்த விவரங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் தவிர்த்து, அருகிலுள்ள ஆதார் சேவை மையங்கள் (Aadhaar Seva Kendra) அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களுக்கும் நேரில் சென்று இப்பணிகளை மேற்கொள்ளலாம். பொதுமக்களின் வசதிக்காக ஆதார் சேவை மையங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், பெற்றோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

EXCLUSIVE | “நாஸ்டாலஜிக்காகத்தான் ஃபீடிங் பாட்டில் செர்லாக்கை அறிமுகப்படுத்தினோம்... செக்‌ஷுவலைஸ் செய்வதை நாங்களும் விரும்பவில்லை!” - கஃபே விளக்கம்!

“நாஸ்டாலஜிக்காக இருக்குமென்றே ஃபீடிங் பாட்டிலில் செர்லாக் விற்றோம்; ஆனா இப்போ...” - கஃபே விளக்கம்!

  • சென்னையில் கடந்த வாரம் ஃபீடிங் பாட்டிலில் செர்லாக் விற்பனை செய்தது ஒரு கஃபே.

  • இதனை பாலியல் ரீதியாக தவறான உள்நோக்கங்களுடன் சிலர் விளம்பரப்படுத்தினர்.

  • அதற்கு கஃபே தரப்பு முதன்முறையாக நியூஸ் 18-ல் பதிலளித்துள்ளது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article