பாம்பன் அருகே 77 கிலோ கஞ்சா பறிமுதல்.. இந்திய கடலோர காவல் படை அதிரடி!

12 minutes ago 1

Last Updated:Nov 23, 2026 5:55 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே கடலோரக் காவல் படை மற்றும் சுங்கத் துறை இணைந்து நடத்திய சோதனையில் 77 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மாதிரி படம்
மாதிரி படம்

பாம்பன் அருகே 77 கிலோ கஞ்சாவை இந்தியக் கடலோரக் காவல் படை பறிமுதல் செய்தது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக இந்தியக் கடலோரக் காவல் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி திருச்சியில் உள்ள சுங்கத் துறையின் மத்திய புலனாய்வுப் பிரிவுடன் (Customs Central Intelligence Unit) இந்தியக் கடலோரக் காவல் படை இணைந்து நேற்று சோதனை நடத்தியது.

அப்போது பாம்பன் அருகே ஒரு படகையும், அதில் இருந்த இருவரையும் மடக்கிப் பிடித்தது. மேலும், அப்படகிலிருந்து சுமார் 77 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள், படகு மற்றும் பிடிபட்ட நபர்கள் மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காகச் சுங்கத் துறையின் மத்திய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Read Entire Article