Last Updated:Aug 02, 2026 7:28 PM IST
இன்றுடன் இந்த சிறப்பு முகாம் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு பணிகளின் காரணமாக இன்னமும் பதிவை நிறைவு செய்யாத பயனாளிகள் பலர் உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், போலியான குடும்ப அட்டைகளைக் கண்டறியவும், தகுதியான பயனாளிகளுக்குச் சீரான முறையில் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த e-KYC சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 3.65 கோடி குடும்ப உறுப்பினர்களில் இதுவரை சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விரல் ரேகை பதிவு செய்யாமல் இருந்தனர். இவர்களுக்காக ஆகஸ்ட் 2-ஆம் தேதியான இன்று, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது.
வேலை, கல்வி அல்லது சொந்தக் காரணங்களுக்காகத் தற்காலிகமாக வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள், இதற்காகத் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் தாங்கள் தற்போது தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள எந்தவொரு ரேசன் கடைகளுக்கும் சென்று தங்கள் விரல் ரேகை அல்லது கண் கருவிழி மூலம் பதிவைச் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இன்றுடன் இந்த சிறப்பு முகாம் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு பணிகளின் காரணமாக இன்னமும் பதிவை நிறைவு செய்யாத பயனாளிகள் பலர் உள்ளனர். இதனால், விடுபட்ட பயனாளிகளின் நலன் கருதி, அரசு மீண்டும் ஒரு முறை இது போன்ற சிறப்பு முகாம்களை நடத்துமா அல்லது கால அவகாசத்தை நீட்டிக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

“ஒரு வாரத்திற்கு மழையை கொண்டாடுங்கள்” -பிரதீப் ஜான் சொன்ன குளிர்ச்சியான செய்தி
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நிச்சயம்.
பிரதீப் ஜான் சொன்ன குளிர்ச்சியான செய்தி.
8ஆம் தேதி வரை நான்கு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.
.png)



English (US) ·