ஆவின் நிறுவனம், தனியார் பிராண்டுகளுக்குப் போட்டியாக, குறைந்த விலையில் புதிய 'மில்க் ரஸ்க்'கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிரீமியம் தர ரஸ்க், டீ நேரத்திற்கு ஏற்ற மொறுமொறுப்பான சிற்றுண்டியாகும்.
16

Image Credit : Asianet News
டீ டைம் பார்ட்னரான ரஸ்க்
மாலை நேர டீ டைம்னாலே நம்ம ஊர்ல ஒரு தனி வைப் தான். அதுவும் சூடான டீயில மொறுமொறு ரஸ்கை முக்கி சாப்பிடுற அந்த சுகமே தனி! மிடில் கிளாஸ் குடும்பங்களின் பட்ஜெட்டையும், Gen-Z கிட்ஸ்களின் 'ஈவினிங் ஸ்நாக்ஸ்' எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யுற வகையில, ஆவின் நிறுவனம் ஒரு மரண மாஸ் அறிவிப்பை வெளியிட்டிருக்கு. இதுவரை பால், தயிர், நெய், ஸ்வீட்ஸ்னு அசத்திட்டிருந்த ஆவின், இப்போ டீ டைம் பார்ட்னரான ரஸ்க் சந்தையிலயும் கெத்தா களம் இறங்கியிருக்கு.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
26
Image Credit : Asianet News
சின்ன பாக்கெட்.! பெரிய ருசி
இன்னைக்கு இருக்கிற விலைவாசி உயர்வுல பிரைவேட் பிராண்ட் ரஸ்க் பாக்கெட் வாங்கினாலே பாக்கெட் காலி ஆயிடும். ஆனா, நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி ஆவின் செம்ம பாக்கெட் ஃபிரண்ட்லியா இந்த ‘மில்க் ரஸ்க்’கை அறிமுகப்படுத்தியிருக்கு. 100 கிராம் எடையுள்ள 'ஆவின் மில்க் ரஸ்க்' வெறும் ₹20-க்கும், சின்னதா ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசைப்படுறவங்களுக்கு 60 கிராம் பாக்கெட் வெறும் ₹12-க்கும் கிடைக்குது. பிரீமியம் குவாலிட்டியோட, பாலின் நன்மைகளும் சேர்ந்து வரதால, இது குவாலிட்டிலயும் சரி, சுவையிலயும் சரி டாப் நாச்!
36
Image Credit : Asianet News
மிடில் கிளாஸ் மக்களின் ஃபேவரைட் சாய்ஸ்
பால்கோவா, மைசூர் பாக், மில்க் பிஸ்கெட்னு 100-க்கும் மேற்பட்ட பொருட்களை வெற்றிகரமாக விற்பனை செஞ்சுட்டு வர்ற ஆவின், இப்போ இந்த ரஸ்க் மூலமா மிடில் கிளாஸ் மக்களின் ஃபேவரைட் சாய்ஸா மாறியிருக்கு. ஆபீஸ் முடிச்சு வந்து ரிலாக்ஸ் பண்ற ஜென்சியாக இருந்தாலும் சரி, வீட்ல இருக்குற பெரியவர்களாக இருந்தாலும் சரி... குறைந்த விலையில தரமான 'க்ரஞ்சி' அனுபவத்தை ஆவின் மில்க் ரஸ்க் கண்டிப்பா தரும். உங்க பக்கத்துல இருக்குற ஆவின் பாலகங்கள்ல இப்போவே இந்த புதிய ரஸ்கை வாங்கி டேஸ்ட் பண்ணி பாருங்க!
46
Image Credit : Asianet News
சந்தையில் ஆவினின் தடம்
ஆவின் நிறுவனம் ஏற்கனவே பால், தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், பால்கோவா, குலாப் ஜாமூன், மைசூர் பாக் மற்றும் மில்க் பிஸ்கெட் போன்ற பலதரப்பட்ட பொருட்களை வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது. தற்போது ரஸ்க் விற்பனையிலும் களம் இறங்கியுள்ளது, தனியார் பிராண்டுகளுக்குப் போட்டியாகவும், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
ஆவின் பாலகங்கள் (Aavin Parlours) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் இந்த புதிய 'ஆவின் மில்க் ரஸ்க்' பாக்கெட்டுகள் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளன. குறைந்த விலையில் நிறைவான தரத்தைக் கொடுக்கும் ஆவினின் இந்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
56
Image Credit : Asianet News
தரமும் சுவையும்
ஆவின் மில்க் ரஸ்க் 'பிரீமியம் குவாலிட்டி' (Premium Quality) தரத்தில், ஆவின் பாலின் நன்மையோடு மிகச் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது. மொறுமொறுப்பான சுவையுடனும், சத்துக்கள் நிறைந்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரஸ்க், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் அமைந்துள்ளது. தேநீரில் தோய்த்துச் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் சரியான பதத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
66
Image Credit : Asianet News
குறைந்த விலையில் தரமான தயாரிப்பு
மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றான மாலை நேரத் தேநீர் உபசரிப்பிற்கு ரஸ்க் மிக முக்கியப் பங்க வகிக்கிறது. தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு ரஸ்க் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் நிலையில், ஆவின் நிறுவனம் சாதாரண மக்களும் எளிதில் வாங்கிப் பயன்பெறும் வகையில் மிகக் குறைந்த விலையில் இதனை சந்தைப்படுத்தியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
.png)
1 month ago
8



English (US) ·