பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை.. 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடக்கம்.!

1 month ago 7

Last Updated:Aug 03, 2026 8:57 AM IST

2-வது சுற்று கலந்​தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்​கு​கிறது. இக்​கலந்​தாய்​வுக்கு கட்-ஆப் மதிப்​பெண் 171 முதல் 135.75 வரை பெற்​றுள்ள 93,117 மாணவர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

பொறியியல் படிப்பு
பொறியியல் படிப்பு

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான ஆன்​லைன் கலந்​தாய்வு நடை​பெற்று வரு​கிறது. சிறப்​புப் பிரி​வினருக்​கான கலந்​தாய்​வைத் தொடர்ந்​து, பொதுப்​பிரி​வினருக்​கான முதல் சுற்று கலந்​தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிவடைந்​தது.

இதன்​மூலம் 28,550 மாணவர்​களுக்கு கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், 2-வது சுற்று கலந்​தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்​கு​கிறது. இக்​கலந்​தாய்​வுக்கு கட்-ஆப் மதிப்​பெண் 171 முதல் 135.75 வரை பெற்​றுள்ள 93,117 மாணவர்​கள் அனும​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

அவர்​கள் தங்​களுக்கு பிடித்​த​மான கல்​லூரி மற்​றும் பாடப்​பிரிவை தேர்வு செய்​து​கொள்ள 5-ம் தேதி மாலை 5 மணி வரை அவ​காசம் அளிக்​கப்​படும். அதன்​பிறகு 7-ம் தேதி காலை 10 மணிக்கு அவர்​களுக்கு தற்​காலிக ஒதுக்​கீடு வழங்​கப்​படும்.

அதை அவர்​கள் 8-ம் தேதி மாலை 5 மணிக்​குள் உறு​திப்​படுத்த வேண்​டும். உறுதி செய்த மாணவர் களுக்கு 9-ம் தேதி காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்​கீட்டு ஆணை ஆன்​லைனில் வழங்​கப்​படும் என தமிழ்நாடு பொறி​யியல் மாணவர் சேர்க்கை செய​லா​ளர் டி.புருஷோத்​தமன் தெரி​வித்​துள்​ளார்.

Read Entire Article