இராமநாதபுரம், நவ. 1- – பொதுப்பணித்துறையில் பணியாற்றும் பொறியா ளர்கள் மற்றும் அலுவலர் கள் உள்ளிட்ட ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஊழி யர்களுக்கு அக்டோபர் மாத ஊதியத்தை உரிய தேதியில் வழங்க முடியாத சூழல் உருவாகி யுள்ளமைக்குத் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்துச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஹ. அப்துல் நஜ்முதீன் வெளியிட்டுள்ள செய்தியில், தலைமைப் பொறியாளர் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் பொதுப்பணித்துறையில், ஊதிய ஒப்பளிப்பு ஆணை வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். நீர்வளத் துறையில் கடந்த அக்டோபர் 22-லேயே ஊதிய ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்ட நிலையில், அதே அரசின் கீழ் இயங்கும் பொதுப் பணித்துறையில் மட்டும் இத்தகையதாமதம் ஏற்படு வதற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அக்டோபர் மாத ஊதி யத்தை நம்பியே குடும்பச் செலவுகள், கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள், மத விழாக் காலச் செலவுகள் மற்றும் வங்கிக் கடன் தவணைகளை எதிர்நோக்கியுள்ள ஊழியர்கள், ஊதியம் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுஉள்ளனர். IFHRMS மென்பொருள் நடைமுறைகளைக் காரணம் காட்டி ஊழியர்களின் ஊதிய உரிமையைப் பறிக்கும் நிர்வாக அலட்சியம் ஏற் புடையதல்ல.
எனவே, பொதுப்பணித் துறை ஊழியர்களின் அக்டோபர் மாத ஊதியம் உரிய தேதியில் கிடைப்பதற்கான ஊதிய ஒப்பளிப்பு ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், நிர்வாகத் தாமதத்திற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்சங்கம் கோரியுள்ளது.
.png)
7 hours ago
1







English (US) ·